
டாடா டியாகோ மாடல் G-NCAP சோதனையில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தியது. இதுதவிர அவ்வப்போது நடைபெறும் சாலை விபத்துக்களின் போதும் டியாகோ தனது வலிமையை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த வரிசையில், புதிய விபத்து புகைப்படங்கள் டியாகோ எவ்வளவு உறுதியானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
புகைப்படங்களிலன் படி டியாகோ மாடல் 8 இன்ச் தடிமனான சுவர் மீது மோதி இருக்கிறது. டியாகோ மோதியதில் சுவர் இடிந்து விழுந்து இருக்கிறது. இதுதவிர காரின் முன்புறத்திற்கு அதிக சேதங்கள் ஏற்பட்டதாக புகைப்படங்களில் துளியும் தெரியவே இல்லை. டியாகோவில் உள்ள பம்ப்பர் மட்டும் கழண்டு விழுந்த நிலையில், முன்புறம் சிறு ஸ்கிராட்ச்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
இந்த விபத்து எப்படி அரங்கேறியது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், சுவரில் முன்புறம் இருந்தபடி கார் மோதி இருப்பதால், அதனை ஓட்டியர் கார் ஓட்ட தெரியாதவராகவே இருக்க வேண்டும். சுவரின் இடுபாடுகளில் ஆங்காங்க விரிசல்கள் காணப்படுவதால், சுவரில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
முன்னதாக ஐதராபாத்தில் உள்ள கார் விற்பனையகம் ஒன்றின் முதல் மாடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டியாகோ மாடலில் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை பயனர் அழுத்தினார். இதனால் கார் சட்டென சீறிப்பாய்ந்து முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தின் போது காரினுள் இருவர் அமர்ந்து இருந்தனர். எனினும் காரினுள் இருந்த இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.