
தமிழ் சினிமா துறையில் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். சினிமா மீது அதீத விருப்பம் கொண்ட இவர் சினிமா தாண்டி பைக் லவ்வர் என தெரியவந்துள்ளது. தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என பல்வேறு திரைப்படங்களை இயக்கி இருக்கும் வெற்றிமாறன் சமீபத்தில் பி.எம்.டபிள்யூ. R nineT ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை வாங்கி இருக்கிறார். புதிய பி.எம்.டபிள்யூ. பைக்குடன் வெற்றிமாறன் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. R nineT ஸ்கிராம்ப்ளர் மாடல் விலை ரூ. 16.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் R nineT மாடலை தழுவி உருவாக்கப்பட்ட ரக்கட் வேரியண்ட் ஆகும். இந்த மாடலின் தோற்றம் ஸ்கிராம்ப்ளர் போன்றே காட்சியளிக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் வாங்கி இருக்கும் பி.எம்.டபிள்யூ. R nineT ஸ்கிராம்ப்ளர் மாடல் கிராணைட் கிரே மெட்டாலிக் ஷேட் கொண்டிருக்கிறது.
இதுதவிர இந்த மாடல் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக்/ரேசிங் ரெட், காஸ்மிக் புளூ மெட்டாலிக்/லைட் லைட் uni மற்றும் கலமடா மெட்டாலிக் மேட் போன்ற நிறங்ளிலும் கிடைக்கிறது. பி.எம்.டபிள்யூ. R nineT ஸ்கிராம்ப்ளர் மாடலில் 1170சிசி, டுவின் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 108 பி.ஹெச்.பி. திறன், 116 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஹைட்ராலிக் அசிஸ்ட் வசதி கொண்ட கிளட்ச், ஷாஃப்ட் ஃபைனல் டிரைவல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாடலில் ரெயின் மற்றும் ரோட் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. இத்துடன் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
பி.எம்.டபிள்யூ. R nineT ஸ்கிராம்ப்ளர் மாடலில் 43mm டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 320mm டுவின் டிஸ்க், பின்புறத்தில் 265mm சிங்கில் டிஸ்க் வழஙஅகப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 19 இன்ச் மற்றும் 17 இன்ச் வீல் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.