மிரட்டலான என்ட்ரி கொடுத்த டாடா டெக்! முதல் நாளே பங்கு விலை 180% சதவீதம் உயர்வு!

By SG Balan  |  First Published Nov 30, 2023, 4:37 PM IST

டாடா டெக் பங்குகளின் வர்த்தகம் தேசிய பங்குச்சந்தையில் (NSE) ரூ.1,200 ஆகவும், மும்பை பங்குச்சந்தையில் (BSE) ரூ.1,199 ஆகவும் தொடங்கியது. இது அவற்றின் ஆரம்பப் பொதுப் பங்கீடு (IPO) விலையை விட 140 சதவீதம் அதிகம்.


டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்குகள் வியாழன் அன்று முதல் முறையாக பங்கு வர்த்தகத்தில் நுழைந்ததன. பங்குகள் வெளியீடப்பட்ட முதல் நாளிலேயே அறிமுக விலையை விட 180 சதவீதம் உயர்ந்துள்ளது.

டாடா டெக் பங்குகளின் வர்த்தகம் தேசிய பங்குச்சந்தையில் (NSE) ரூ.1,200 ஆகவும், மும்பை பங்குச்சந்தையில் (BSE) ரூ.1,199 ஆகவும் தொடங்கியது. இது அவற்றின் ஆரம்பப் பொதுப் பங்கீடு (IPO) விலையை விட 140 சதவீதம் அதிகம்.

Latest Videos

undefined

வர்த்தக ஆரம்பத்தில் 180 சதவீதம் வரை உயர்ந்து ரூ.1,400 ஆக உயர்ந்தது, காலை 11.47 மணிக்குள் ஐபிஓ விலையை விட 167 சதவீதம் அதிகரித்து ரூ.1338.95 ஆக இருந்தது. நிஃப்டி 50 பங்குகள் வர்த்தகம் 0.18 சதவிகிதம் குறைவாக இருந்தது. சென்செக்ஸ் 0.29 சதவிகிதம் சரிந்தது.

உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்!

டாடா குழும நிறுவனத்தின் ரூ.3,042.5 கோடி மதிப்பிலான ஐபிஓ பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் ரூ.54,353.50 கோடியாக இருந்தது. ஐபிஓவில் ஒரு பங்கின் விலை ரூ.475 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது.

டாடா டெக்னாலஜிஸ் என்பது டாடா குழுமத்தின் நிறுவனமாகும். இந்நிறுவனம் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின் ஐபிஓ வெளியீட்டுக்கு முன்வந்துள்ளது. 2004ஆம் ஆண்டு சந்தைக்கு வந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன பங்குகள் தான் டாடா குழுமத்தின் முந்தைய ஐபிஓ வெளியீடு ஆகும்.

டாடா டெக்னாலஜிஸ் 67 முதலீட்டாளர்களிடமிருந்து மட்டும் ரூ.791 கோடி திரட்டியுள்ளது. அவற்றில் இருந்து ஃபிடிலிட்டி இன்டர்நேஷனல், பிஎன்பி பரிபாஸ், நிப்பான் லைஃப் இந்தியா, எச்எஸ்பிசி, கோடக், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், மோதிலால் ஓஸ்வால், எடெல்வீஸ், டிஎஸ்பி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவை முக்கியமானவை.

ஜிம் செல்லும் ஆண்களில் 7 பேரில் ஒருவருக்கு ஆண்மைக்குறைவு அபாயம்! ஆய்வில் ஷாக்கிங் முடிவுகள்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!