Tata Nexon price : நெக்சான் மாடல் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்

Nandhini Subramanian   | Asianet News
Published : Jan 25, 2022, 11:28 AM IST
Tata Nexon price : நெக்சான் மாடல் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்

சுருக்கம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.   

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலையை இந்தியாவில் உயர்த்தியது. அதன்படி நெக்சான் விலை ரூ. 13 ஆயிரத்தில் துவங்கி ரூ. 15 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது. முன்னதாக  கார் மாடல்கள் விலையை உயர்த்த போவதாக டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தான் நெக்சான் மாடல் விலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில், நெக்சான் விலை இரண்டே மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து வருகிறது. 

வேரியண்ட்களுக்கு ஏற்ப நெத்சான் பெட்ரோல் மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 13 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான் XZ+ டார்க் வேரியண்ட் விலை மட்டும் மாற்றப்படவில்லை. விலை உயர்வின் படி டாடா நெக்சான் மாடல் விலை ரூ. 7.39 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.89 லட்சம் என மாறி இருக்கிறது. 

நெக்சான் டீசல் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனினும் டீசல் மாடல்களில் பல்வேறு வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. டீசல் வேரியண்ட்களுடன் டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் நெக்சான் XMA (S) வேரியண்டை சத்தமின்றி அறிமுகம் செய்தது. விலை உயர்வுக்கு பின் டாடா நெக்சான் டீசல் மாடல்கள் விலை ரூ. 9.69 லட்சத்தில் துவங்கி ரூ. 13.34 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

டாடா நெக்சான் மாடல் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே  120 பி.ஹெச்.பி. திறன், 179 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 110 பி.ஹெச்.பி. திறன், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடல் மொத்தத்தில் 22 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடல் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் குரூயிசர், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வேகத்தை மீறினால் ரூ.1,000 அபராதம்.. ஓட்டுநர்கள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதிகள்
ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!