கொஞ்சம் அப்டேட் நிறைய அம்சங்கள் - விரைவில் அறிமுகமாகும் புது நெக்சான் EV

By Kevin KaarkiFirst Published Jan 29, 2022, 12:16 PM IST
Highlights

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மாடல் பல்வேறு புதிய அம்சங்களை பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் EV மாடலின் டிரைவ் டிரெயின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த  சில மாதங்களாக புதிய நெக்சான் EV மாடல் சாலையில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் நெக்சான் EV பின்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் புதிய அலாய் வீல்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி டாடா மோட்டார்ஸ் தனது நெக்சான் EV-இன் புது வேரியண்டை உருவாக்கி வருவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த மாடலில் சற்றே பெரிய பேட்டரி பேக் மற்றும் அதிக திறன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். டெல்லி ஆர்.டி.ஒ. தரவுகளின் படி இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் 136 பி.எஸ். எலெக்ட்ரிக் மோட்டார், 40 கிலோவாட் ஹவர் பேட்டரி யூனிட் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

புதிய அப்டேட்களுன் நெக்சான் EV இதுவரை இல்லாத வகையில் அதிக செயல்திறன் மற்றும் கூடுதல் ரேன்ஜ் வழங்குவதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் நெக்சான் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. எனினும், இது அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும். புதிய மாடலில் வழங்கப்படும் பெரிய பேட்டரி 300 கிலோமீட்டர்களுக்கும் அதிக ரேன்ஜ் வழங்கும்.

இவைதவிர புதிய நெக்சான் EV மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். டாடா நெக்சான் EV விலை ரூ. 14.29 லட்சம் என துவங்குகிறது. அந்த வகையில் புதிய மேம்பட்ட மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

டாடா நெக்சான் EV மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் எம்.ஜி. ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

click me!