tata neu: டாடா neu செயலி: ‘புஸ்’ஸாகிப்போன எதிர்பார்ப்பு: பயனாளிகள் புலம்பல்

Published : Apr 08, 2022, 03:20 PM IST
tata neu: டாடா neu செயலி: ‘புஸ்’ஸாகிப்போன எதிர்பார்ப்பு: பயனாளிகள் புலம்பல்

சுருக்கம்

tata neu: வால்மார்ட்டின் போன்பே, கூகுளின் கூகுள்பே, சீனாவின் பேடிஎம் ஆகியவற்றுக்கு மாற்றாகச் சந்தையில் தனி இடத்தைப் பிடிக்க டாடா குழுமத்தின் சார்பில் டாடா நியூ என்ற பேமெணட் செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

வால்மார்ட்டின் போன்பே, கூகுளின் கூகுள்பே, சீனாவின் பேடிஎம் ஆகியவற்றுக்கு மாற்றாகச் சந்தையில் தனி இடத்தைப் பிடிக்க டாடா குழுமத்தின் சார்பில் டாடா நியூ என்ற பேமெணட் செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடாவின் நியூ செயலியை ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பயனாளிகள் அணுகியதால், செயலி செயல்படுவதில்சிக்கல் எழுந்தது. பலருக்கு லாகின் செய்யக்கூட முடியவில்லை, பணம் அனுப்ப முடியவில்லை என்பதால் பயனாளிகள் புலம்பித்தள்ளிவிட்டனர்.

செயல்பாடு மந்தம்

சமூக ஊடகமான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாவில் பலரும் டாடாவின் நியு செயலி ஏமாற்றம் அளித்தது என்று புலம்பினார்கள். டாடா நியு செயலியை அறிமுக நாளில் பயன்படுத்தினால் ஏராளமன கேஷ்பேக், சலுகை, பரிசுகள் கிடைக்கும் என்பதால் லட்சக்கணக்கனோர் ஒரே நேரத்தில் முயன்றனர்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் நேற்று மட்டும் 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர். ஆனால், லாகின் செய்ய சர்வர் நீண்டநேரம் எடுத்துக்கொண்டதால் பயனாளிகள் வெறுப்பாகினர்.

போட்டி

அமேசான், ப்ளிப்கார்ட்டை விட டாடாவின் நியூ செயலி மெதுவாக இருக்கிறது. மாற்று செயலியைத் தேடிவந்தால் இப்படியா ஆவது என்று பயனாளிகள் வேதனை தெரிவித்தனர்.ரிலையன்ஸ், அமேசான் நிறுவனங்களின் செயலுக்கு போட்டியாக வந்துள்ள டாடாவின் நியூ செயலியில் மளிகைப் பொருட்கள், மின்னணு சாதனங்கள்,விமான டிக்கெட், ஹோட்டல்கள், மருத்துவமனை, அழகுசாதனப் பொருட்கள், சொகுசு வசதிகள், கிரிக்கெட், பொழுதுபோக்கு உள்ளிட்ட 12 பிரிவுகள் உள்ளன.

அமேசான், பேடிஎம், ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்கள் செயலியை சூப்பர் ஆப்ஸாக மேம்படுத்திக்கொண்டன. அதாவது பேமெண்ட் தவிர்த்து, ஷாப்பிங், டிக்கெட் புக்கிங், மளிகைப் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்டவை ஒரே செயலியில் கிடைக்கும்.

வசதிகள்

டாடா நியுவிலும் பிக்பாஸ்கெட்டில் ஆன்-லைனில் பொருட்கள் வாங்குதல், 1எம்ஜி ஆன்லைன் ஃபார்மஸி, கிரோமா, விமான டிக்கெட் முன்பதிவு, டைட்டன், டானிஷ்க்கில் பொருட்கள்வாங்குதல், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த செயலியில் ஒருங்கே கிடைக்கும்.
தொலைப்பேசிக் கட்டணம், மின் கட்டணம், சமையல் சிலிண்டர் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இதில் இருக்கின்றன. புதிய காப்பீடு பெறுதல், காப்பீட்டுக்கு கட்டணம் செலுத்துதல், தனிநபர் கடன் ஆகியவையும் இதில் கிடைக்கும்.

டாடா நியூ செயலி மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்-லைன்பேங்கிங், ப்ரீபெய்ட் சேவைகள், யுபிஐ, டாடா பே, உள்ளிட்ட பல்வேறு விதமான பேமெண்ட் அம்சங்கள் உள்ளன. இது தவிர பயனாளிகள் கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு ஸ்கேனிங் செய்து பில் செலுத்தும் க்யூஆர் கோட் வசதியும் இதில் உள்ளது.மின் கட்டணம், டிடிஹெச் கட்டணம், பிராண்ட்பேன்ட்சேவைக்கான பில், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த செயலியில் உள்ளன.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

புதிய தொழிலாளர் சட்டத்தால் 'டேக் ஹோம்' சம்பளம் குறையுமா? மத்திய அரசு விளக்கம்!
அடேங்கப்பா! ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகையா.. முழு விவரம்! நோட் பண்ணிக்கோங்க!