repo rate : rbi monetary policy : ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் குறுகியகாலக் கடனுக்கான ரெப்போ வட்டிவீதத்தை 11-வது முறையாக இன்றும் மாற்றவில்லை
ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் குறுகியகாலக் கடனுக்கான ரெப்போ வட்டிவீதத்தை 11-வது முறையாக இன்றும் மாற்றவில்லை.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றையடுத்து, கொண்டுவரப்பட்ட லாக்டவுனில், அதாவது, 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது.
இன்று 11-வது நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் நடந்துள்ளது. இதுவரை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 % என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5% என்றும் நீட்டித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் முக்கிய 10 அம்சங்கள்
குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ ரேட் வீதம் மாற்றமில்லாமல் தொடர்ந்து 4% அளவிலேயே நீடிக்கிறது
2022-23ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். கடந்த நிதிக்கொள்கைக் கட்டத்தில் 7.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் விலை சுமையால், பொருளாதார வளர்ச்சி குறையும்
வங்கிகளுக்கு இறுதிநிலை கடன்வசதி எனப்படும் எம்எஸ்எப் வீதம் மற்றும் வங்கி வட்டி வீதம் தொடர்ந்து 4.25 சதவீதத்திலேயே இருக்கும். எல்ஏஎப் வசதியை 50 புள்ளிகள் வரை வைத்துள்ளது
சர்வதேச அளவில் ஏற்படும் சம்பவங்களால் நாட்டின் நிதிச்சூழல் பாதிக்கப்படையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை ரிசரவ்வங்கி எடுத்து சமநிலைப்படுத்தும்.
கொரோனா பெருந்தொற்றிலிருந்து மெல்ல மெல்ல இந்தியப் பொருளாதாரம் மீள்கிறது. ஆதலால் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.5 சதவீதத்திலேயே இரு்கும்
நடப்பு நிதியாண்டில் நாட்டின் சராசரி பணவீ்க்கம் 5.7 சதவீதமாக இருக்கும். இதற்கு முன்பு 4.5 சதவீதம் என மதிப்பிடப்பட்டிருந்தது.
ரிசர்வ் வங்கியிடம் தேவையான அளவுக்கு அந்நியச் செலவாணி கையிருப்பு இருக்கிறது. ஆதலால், பொருளாதாரத்தில் ஏற்படும் பின்னடைவுகளில் இருந்து ரிசர்வ் வங்கி பாதுகாக்கும்
ராபி பருவத்தின் விளைச்சல் கிராமப்புறங்களின் தேவை அதிகரிப்புக்கு ஆதரவு அளிக்கும். நகர்பபுற தேவைகள் நேரடியான சேவைகள் மூலம் ஊக்கப்படுத்தப்படும்.
கடன் அளிப்பதற்கான கடன் மதிப்பு தரம்(எல்டிவி) 2023ம் ஆண்டு மார்ச் 31 ம்தேதி வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் தனிநபர் வீட்டுக் கடன் பெறுவது எளிதாக அமையும்.
பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் பொருளாதார வளர்ச்சி்க்கு அழுத்தத்தை அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அரசுக்கு பெரும் சமையாக இருக்கும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.