
மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் சத்து கூட்டப்பட்ட fortified அரிசி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவின்றன.
Fortified(போர்ட்டிபைடு) அரிசி என்பது, செயற்கையாக சத்துகூட்டப்பட்ட, வலிமை சேர்க்கப்பட்ட அரிசியாகும். இந்த அரிசியில் போலிக்ஆசிட், இரும்புச்சத்து, விட்டமின்கள், வி12 விட்டமின்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
ரூ.2700 கோடி
இந்த அரிசியை மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ.2,700 கோடிஒதுக்க மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவுகளை வழங்கவும், சத்துக்குறைபாட்டால் வரும் நோய்களில் இருந்து காக்கவும் இந்த அரிசி வழங்கப்படுகிறது.
சத்துகூட்டப்பட்டஅரிசி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத்தினத்தன்று பிரதமர் மோடி பேசுகையில் “ ஏழைகளுக்கும், ஏழைக் குழந்தைகளுக்கும் சத்துக் கூட்டப்பட்ட அரிசி பல்வேறு நலத்திட்டங்களில் சேர்க்கப்படும். குறிப்பாக மதிய உணவுகளில் சேர்க்கப்படும். இதன் மூலம் சத்துக்குறைபாட்டைத் தவிர்க்க முடியும். சத்துக்குறைபாடுகளால் குழந்தைகளின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் பாதிக்கிறது. ஆதலால், பல்வேறு அரசுத் திட்டங்களில் சத்துக்கூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும். இந்த அரிசி மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் ” எனத் தெரிவித்தார்.
முதல்கட்டமாக இந்த அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்ய 15 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 5 மாநிலங்கள் இந்த அரிசியை குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த திட்டத்துக்கான அரிசியை ஆந்திரப்பிதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் வினியோகம் செய்யத் தொடங்கிவிட்டன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.