rbi policy: கடனுக்கான வட்டிவீதம் 10-வது முறையாக மாற்றமில்லை: rbi நிதிக்கொள்கை முக்கிய அம்சங்கள்

By Pothy RajFirst Published Apr 8, 2022, 10:52 AM IST
Highlights

rbi policy: குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதத்திலும், வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதத்திலும் எந்தவிதத்திலும் மாற்றம் செய்யாமல் ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கைக் கூட்டத்தில் இன்று அறிவித்துள்ளது

குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதத்திலும், வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதத்திலும் எந்தவிதத்திலும் மாற்றம் செய்யாமல் ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கைக் கூட்டத்தில் இன்று அறிவித்துள்ளது

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றையடுத்து, கொண்டுவரப்பட்ட லாக்டவுனில், அதாவது, 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் 9 முறை நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் நடந்துள்ளது. இதுவரை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 % என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5% என்றும் நீடிக்கிறது.

இந்நிலையில் நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு மும்பையில் கூடி விவாதித்தது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்த பின் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில்  கூறியதாவது:

1.    குறுகியக் காலக்கடனுக்கான வட்டிவீதத்தில் மாற்றமில்லாமல் 4 % என்ற ரீதியில் நீடிக்கிறது.
2.    வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் டெபாசிட்களுக்குத் தரப்படும் வட்டி அதாவது ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதமும் மாற்றமில்லாமல் 3.35% என்ற ரீதியில் தொடர்கிறது
3.    2022-23ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். கடந்த நிதிக்கொள்கையில் இது 7.8% சதவீதமாக கணிக்கப்பட்டது.
4.    நாட்டில் பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் 5.7% இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
5.    2022-23ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி என்பது கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.


6.    உக்ரைன் ரஷ்யா போரால் இன்னும் சிறிது காலத்துக்கு சமையல் எண்ணெய் உயர்ந்துகொண்டேதான் இருக்கும்
7.    நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை சமாளிக்கும் விதத்தில்தான் இருக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக அந்நியச்செலவாணி, 60650 கோடி டாலர் இருக்கிறது.
8.    நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூனில் ஜிடிபி 16.2 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 6.2 சதவீதமாகவும், அக்டோபர் டிசம்பர் காலாண்டில் 4.1 சதவீதமாகவும், 2023 ஜனவரி மார்ச்சில் 4 சதவீதமாகவும் இருக்கிறது

இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்
 

click me!