ரூ.9,000 கோடி முதலீடு! தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்! நாட்டிலேயே முதல் முறை!

By SG BalanFirst Published Apr 18, 2024, 7:20 PM IST
Highlights

ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபண்டர் போன்ற சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முதல் முறையாக ஜே.எல்.ஆர். எனப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது.

பிரபலமான சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9000 கோடி முதலீடு செய்ய உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் காரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைய உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி ராணிப்பேட்டையில் புதிய ஆலையை டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. இதன் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு கோயில்களுக்கு ரூ.50000000 காணிக்கை செலுத்திய ஆனந்த் அம்பானி!

ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபண்டர் போன்ற சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முதல் முறையாக ஜே.எல்.ஆர். எனப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது.

இப்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜே.எல்.ஆர். கார்கள் பிரிட்டனில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளிலும் ஜே.எல்.ஆர். கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ராணிப்பேட்டை ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கவும் இங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் ஏற்றுமதி செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

மரத்தைக் கட்டிப் பிடிக்க ரூ.1500 கட்டணமா? பெங்களூரு நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

click me!