ஒரே நாளில் 4 ஸ்பெஷல் எடிஷன் SUV-க்கள் அறிமுகம் - மாஸ் காட்டிய டாடா மோட்டார்ஸ்!

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 23, 2022, 08:10 PM IST
ஒரே நாளில் 4 ஸ்பெஷல் எடிஷன் SUV-க்கள் அறிமுகம் - மாஸ் காட்டிய டாடா மோட்டார்ஸ்!

சுருக்கம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஒட்டுமொத்த எஸ்.யு.வி. மாடல்களையும் காசிரங்கா எடிஷனில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா பன்ச், டாடா நெக்சான், டாடா ஹேரியர் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடலான டாடா சஃபாரி உள்ளிட்டவைகளின் காசிரங்கா எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய காசிரங்கா எடிஷனில் எஸ்.யு.வி. மாடல்களின் ஒட்டுமொத்த டிசைன் மேம்படுத்தப்பட்டு, டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்க் நிறத்தில் கிடைக்கிறது.

இத்துடன் ஃபாக்ஸ்-வுட் டேஷ்போர்டு, பெய்க் நிற இன்சர்ட்கள்செய்யப்பட்டுள்ளன. மேலும் காரின் முன்புற ஃபெண்டரில் ரைனோ பேட்ஜிங் செய்யப்பட்டு உள்ளது. இதன் டோர் ட்ரிம் பியானோ பிளாக் நிறத்திலும், முன்புற கிரில் பியானோ பிளாக் நிறத்திலும்,16 இன்ச் அலாய் வீல்கள் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது. புதிய காசிரங்கா எடிஷன் டாடா எஸ்.யு.வி.-க்களின் டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்

டாடா பன்ச் காசிரங்கா எடிஷன் விலை ரூ. 8.58 லட்சத்தில் துவங்கி ரூ. 9.48 லட்சம்
டாடா நெக்சான் (P) காசிரங்கா எடிஷன் விலை ரூ. 11.78 லட்சத்தில் துவங்கி ரூ. 12.43 லட்சம்
டாடாநெக்சான் (D) காசிரங்கா எடிஷன் விலை ரூ. 13.08 லட்சத்தில் துவங்கி ரூ. 13.73 லட்சம்
டாடா ஹேரியர் காசிரங்கா எடிஷன் விலை ரூ. 20.40 லட்சத்தில் துவங்கி ரூ. 21.0 லட்சம்
டாடா சஃபாரி காசிரங்கா எடிஷன் விலை ரூ. 20.99 லட்சத்தில் துவங்கி ரூ. 22.39 லட்சம்

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அனைத்து எஸ்.யு.வி. மாடல்களின் விலையும் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

காசிரங்கா எடிஷன் மாடல்களில் முழுக்க முழுக்க காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ஸ்பெஷல் எடிஷன்களின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்