
பியாஜியோ இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப்பட இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் இறுதியான ப்ரோடக்ஷன் வெர்ஷன் உருவாக இன்னும் இரு ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகன துறையில் பியாஜியோ நிறுவனம் தாமதமாகவே எண்ட்ரி கொடுக்கிறது.
தற்போது மாநில மற்றும் மத்திய அரசுகள் சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் மாணியம் வழங்கப்பட்டு வருகிறது. மாணியம் இல்லாத காலக்கட்டத்திலும் வியாபாரம் செய்ய பியாஜியோ திட்டமிட்டு வருகிறது. அரசு வழங்கும் மாணியம் காரணமாக இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் உற்பத்திக்கு ஏற்ற உள்கட்டமைப்புகள் ஏராளமாக இருக்கின்றன. எனினும், வினியோகம் சார்ந்த பிரிவில் இன்னும் இடையூறுகள் உள்ளது என பியாஜியோ நிறுவன மூத்த அதிகாரி கருதுகிறார். பியாஜியோ நிறுவனம் அதிவேக பெர்ஃபார்மன்ஸ் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பியாஜியோ நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஏத்தர் 450X மற்றும் அதற்கு இணையான மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
ஆரம்பம் முதல் முழுமையாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்படுகிறதா அல்லது அப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்களை தழுவி புதிய ஸ்கூட்டர் உருவாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.