Share market today: கரடியின் பிடியில் திணறும் பங்குச்சந்தை: தொடர்ந்து 6-வது நாளாக வீழ்ச்சி

Published : Feb 23, 2022, 03:49 PM ISTUpdated : Feb 23, 2022, 04:57 PM IST
Share market today: கரடியின் பிடியில் திணறும் பங்குச்சந்தை: தொடர்ந்து 6-வது நாளாக வீழ்ச்சி

சுருக்கம்

ரஷ்யா-உக்ரைன் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால்,  மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 6-வது நாளாக வீழ்ச்சி அடைந்தது.

ரஷ்யா-உக்ரைன் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணிகளால்,  மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 6-வது நாளாக வீழ்ச்சி அடைந்தது.

 உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம், அமெரிக்க  பெடரல் வங்கி வட்டியை உயர்த்தவிருக்கும் அச்சம், உக்ரைன்-ரஷ்யா பதற்றத்தால் சர்வதேச சந்தையி் கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலராக உயர்ந்தது, பங்குச்சந்தை ஒபந்தத் தேதிகள் நாளையுடன் முடிகிறது போன்றவற்றால், மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.

கடந்த 5 நாட்களாக சந்தையில் இழப்பு தொடர்ந்தநிலையில் இன்றுகாலை முதல் முதலீட்டாளர்கள் பங்குகள் ஆர்வத்துடன் வாங்கியதால்,  பங்குச்சந்தையில் வர்த்தகம்  ஏற்றத்துடன் இருந்தது. ஆனால், பிற்பகுதிக்குப்பின் மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்தது.  

வர்த்தகம் இன்று காலை  57,632 புள்ளிகளில் தொடங்கியது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் அதிகபட்சமாக 57,733 புள்ளிகள் வரை உயர்ந்தது.  ஆனால் பிற்பகுதியில் இந்த உயர்வை மும்பை  பங்குச்சந்தையால் தக்கவைக்க முடியவில்லை

உக்ரைன்-ரஷ்ய உறவில் சிறிய முன்னேற்றமாக ரஷ்யஅதிபர் விளாதிமிர் புதின், “உக்ரைன் இடையிலான பதற்றத்தைத் தணிக்க ராஜாரீதியான, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த தயாராகஇருப்பதாகத் தெரிவித்துள்ளது, பதற்றக்கும்குறைக்கும்வகையில் இருக்கிறது. 

வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 69 புள்ளிகள் சரிந்து 57,232 புள்ளிகளில் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 29 புள்ளிகள் குறைந்து 17,050 புள்ளிகளில் நிலைகொண்டது. 

மும்பைப் பங்குச்சந்தையில் 17 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன, வங்கி, தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் லாபமடைந்தன.
நிப்டியில் பொதுத்துறை வங்கிகள், ரியல்எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் பிரிவு, உலோகம் ஆகிய துறைகளின் பங்குகள் லாபமடைந்தன. வங்கி, ஆட்டோமொபைல், மருந்துத்துறை பங்குகள் ஓரளவுக்குதான் லாபமடைந்தன. 
.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!