தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சிஇஓ கிருஷ்ணன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
ரூ. 9,000 கோடி தவறுதலாக கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்த விவகாரம் தொடர்பாக மெர்க்கன்டைல் வங்கி சிஇஓ கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.
பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார், கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பருடன் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ம் தேதி மாலை 3 மணியளவில் ராஜ்குமாரின் செல்போனிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ரூ. 9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தியில் வந்துள்ளது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்னைக்கு இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடையாம்.!
இதனையடுத்து, உடனடியாக வங்கி நிர்வாகம் அவரது கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெற்றது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சிஇஓ கிருஷ்ணன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது விலகல் கடிதத்தை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- சென்னையில் ஆன்லைன் கூரியர் மோசடி: மக்களே உஷார் - போலீஸ் எச்சரிக்கை!