
தமிழகத்தில் அந்நிய நேரடி முதலீடு 2021ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்களில் 41 சதவீதம் அதிகரித்துள்ளது ரூ.17 ஆயிரத்து 696 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு இதே மாதத்தில் ரூ.12,504 கோடியாக அதிகரித்துள்ளது.
53% உயர்வு
2021ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டில் அந்நியநேரடி முதலீடு 53 சதவீதம் அதிகரித்து ரூ,9,332 கோடியாக அதிகரித்துள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்கமளிப்புதுறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி கூறியதாவது:
தமிழகம் 5வது இடம்
நாட்டின் அந்நிய நேரடி முதலீடு வருகையில் தமிழகத்தின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் அதிகஅளவு அந்நியநேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. 2021, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தமிழகம் ரூ.8,364 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் 26% முதலிடத்திலும், கர்நாடகா 23%, குஜராத் 21 சதவீதம், டெல்லி 13 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன.
தமிழகம் வளர்ச்சி குறையவில்லை
2021ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு 16 சதவீதம் குறைந்து ரூ.3 லட்சத்து 19ஆயிரத்து 976 கோடியாக இருந்தபோதிலும் கூட தமிழகத்தில் வளர்ச்சி இருந்தது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி, “ தமிழகம் 2021ம் ஆண்டில் 302 கோடி டாலர் அளவுக்கு அந்நியநேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டது.
நேரடி முதலீடு
தமிழகத்துக்கான வளர்ச்சி ஆலோசனைக் குழுவில் இருக்கும் பூஜா குல்கர்னி கூறுகையில் “ தமிழக அரசு கட்டுமானம், நிதிச்சேவை,ஆட்டோமொபைல், மின்னணு மற்றும் எந்திரங்கள் உற்பத்தி, சில்லரை வர்த்தகம், தகவல்தொழில்நுட்ப சேவைப் பிரிவில் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. ஆனால் கொரோனா தொற்றுகாலத்தில் மற்ற எந்த மாநிலத்தையும்விட தமிழகத்தின் உற்பத்தி துறைதான்அதிகமாகப் பாதிக்கப்பட்டது” எனத்தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.