swiggy zomato: ஸ்விக்கி, ஜோமேட்டோவுக்கு கிடுக்கிப்பிடி: மத்திய அரசு புதிய உத்தரவு

By Pothy RajFirst Published Jun 14, 2022, 8:27 AM IST
Highlights

swiggy zomato :ஆன்-லைன் உணவு வர்த்தகம் மற்றும் சப்ளை செய்யும் நிறுவனங்களான ஜோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

ஆன்-லைன் உணவு வர்த்தகம் மற்றும் சப்ளை செய்யும் நிறுவனங்களான ஜோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

வெளிப்படை அவசியம்

அதாவது, வாடிக்கையாளர்கள் எவ்வளவு தொகைக்கு ஆர்டர் செய்கிறார்கள், டெலிவரி கட்டணம், பேக்கேஜிங் செலவு, விலை உயர்வு, வரி, ரெஸ்டாரன்ட்கள் தொலைப்பேசி எண் ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் குறைதீர்வு முறையை மேம்படுத்தி அடுத்த 15 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட் ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புகார்கள்

ஆன்-லைன் உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் புகார்கள் அதிகரித்துள்ளன, அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட நேர்மையற்ற செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்தன. 

இதையடுத்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் தலைமையில் ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட உணவு சப்ளை நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

இந்தஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

15 நாட்கள் அவகாசம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர்ப்பு எண் உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெலிவரி கட்டணம், பேக்கேஜிங் கட்டணம் விவரம், விலைவாசி மற்றும் உணவு பொருட்களின் அளவு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சில நேரங்களில் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர்செய்யும் உணவு ஒன்றும், வேறு ஒரு உணவு வழங்குவதும் இருக்கிறது. உணவுகள் போதுமானவையாக இருப்பதில்லை, நேரத்துக்கு டெலிவரி செய்வதில்லை போன்ற புகார்கள் குறித்து பேசப்பட்டன.

வாடிக்கையாளர்களிடம் எந்தவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் எவ்வளவு தொகைக்கு ஆர்டர் செய்கிறார்கள், டெலிவரி கட்டணம், பேக்கேஜிங் செலவு, விலை உயர்வு, வரி, ரெஸ்டாரன்ட்கள் தொலைப்பேசி எண் ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

சேவை மையம்

வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்த வேண்டும். குறைதீர்ப்பு மையம ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து அடுத்த 15 நாட்களுக்குள் ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட ஆன்-லைன் உணவு நிறுவனங்கள் அளிக்க வேண்டும். 

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 3631 புகாரக்ள் தேசிய நுகர்வோர் எண்ணுக்கு வந்துள்ளது. இதில் ஸ்விக்கி மீது 1915 புகார்களும், ஜோமேட்டோ மீது 2,828 புகார்களும் வந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்விக்கி மீது வந்துள்ள 3631 புகார்களில் 22 சதவீதம் சேவைக்குறைபாடு காரணமாகவும், 17சதவீதம் உணவு தாமதமாக டெலிவரி செய்யப்பட்டதாகவும், உணவு டெலிவரி செய்யவில்லை என்றும் 13 சதவீதம் டெலிவரி செய்யப்பட்ட பொருட்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டு, பணத்தை திரும்ப வழங்காமல் ஏமாற்றியதாக 11 சதவீதப் புகார்கள் வந்துள்ளன. 

click me!