
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, குறைந்த செலவில் சுவையான உணவை ஆர்டர் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக புதிய ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி ‘டோயிங்’ ஆகும்.
இந்த புதிய செயலியின் முக்கிய அம்சம் மலிவு விலை உணவு. ரூ.100 முதல் ரூ.150 வரை விலை கொண்ட உணவு விருப்பங்களை வழங்குகிறது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. மினி மீல்ஸ், பர்கர்கள், சாண்ட்விச்கள், கேக்குகள், இனிப்புகள் போன்றவை மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன.
உதாரணமாக, டொயிங் ஆப்பில் கேக் ரூ.12-க்கு கிடைக்கும் நிலையில், பிரதான ஸ்விக்கி ஆப்பில் அது ரூ.14.99 ஆக உள்ளது. மேலும், ரூ.99-க்கும் குறைவான சிறப்பு ஃபிளாஷ் டீல்களும் கிடைக்கின்றன. ஸ்விக்கி தனது வழக்கமான பெங்களூரு தளத்தைத் தவிர்த்து புதிய நகரில் ஆப்பை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.
புனேவில் மாணவர்கள் மற்றும் இளம் பணியாளர்கள் குறைவாக இருந்தாலும், மலிவு விலை உணவுக்கான தேவையை சோதனை செய்வதற்காக இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இன்ஸ்டாமார்ட், ஸ்நாக், டைன்அவுட், க்ரூ, பிங் போன்ற சேவைகளை நிறுவனம் தனித்தனி ஆப்களாக வழங்குகிறது.
இதன் மூலம், ஸ்விக்கி சூப்பர்-ஆப் மாடலை விட்டு விலகி, பல்வேறு சேவைகளுக்கு தனித்தனி பிராண்டுகளை உருவாக்கும் சூப்பர்-பிரான்ட் மாடலுக்கு மாறுகிறது. ஸ்விக்கியின் உணவு விநியோக சேவை வேகமாக வளர்ந்து வருகிறது. 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 14 மில்லியன் மாதாந்திர பயனர்கள் இருந்த நிலையில், 2026 நிதியாண்டின் அதே காலத்தில் அது 16.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.
முன்னர் ஸ்விக்கி ரூ.99 ஸ்டோர் மூலம் உணவை வழங்கியிருந்தாலும், டோயிங் ஆப் முழுமையாக ₹100–₹150 விலை வரம்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறது செலுத்துவதால், வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.