கடன் வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ரிசர்வ் வங்கியின் அடுத்த சர்ப்ரைஸ்?

Published : Sep 17, 2025, 04:00 PM IST
rbi

சுருக்கம்

கடந்த ஏழு மாதங்களாக பணவீக்கம் 4% இலக்கை விடக் குறைவாகவே உள்ளது. இது நீண்ட காலத்திற்கு வட்டி நீடித்தால், RBI மேலும் விகிதங்களை குறைக்க வாய்ப்புண்டு.

உணவுப் பொருட்களின் விலை குறைவு, ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் மற்றும் உற்பத்தி செலவு குறைவு போன்ற காரணிகளால், நாட்டின் பணவீக்கம் வருகிறதா மேலும் மாதங்களில் குறைய வாய்ப்புள்ளதாக உலகளாவிய டேட்டா நிறுவனம் மோர்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களை 0.5% வரை குறைக்கும் சூழல் உருவாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் இரண்டு முக்கிய கூட்டங்களில் தலா 0.25% விகிதக் குறைப்பு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

2026 நிதியாண்டுக்கான கணிப்பில், நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் சராசரி பணவீக்கம் 2.4% மட்டுமே இருக்கும் என மோர்கன் ஸ்டான்லி கூறியுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 4% விகிதத்தை விட மிகவும் குறைவு.

பணவீக்கம் குறைவதற்கான முக்கிய மூன்று காரணிகள்:

  • உணவுப் பொருட்களின் விலை சரிவு
  • ஜிஎஸ்டி விகிதங்கள் குறைவு
  • தொழிற்சாலைகளின் உற்பத்தி செலவுகள் குறைவு

கடந்த ஏழு மாதங்களாக பணவீக்கம் 4% இலக்கை விடக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை குறைவு இதில் பெரிய பங்கு உள்ளது. இது நீண்ட காலத்திற்கு வட்டி நீடித்தால், RBI மேலும் விகிதங்களை குறைக்க வாய்ப்புண்டு.

உணவு மற்றும் எரிபொருள் விலைகளைத் தவிர்த்த மையப் பணவீக்கம் கடந்த 22 மாதங்களாக 4%க்கு கீழே உள்ளது. தற்போது இது 3.1% ஆக நிலைத்திருக்கிறது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பொதுவான விலை உயர்வு அழுத்தம் குறைந்து வருவதை அறியலாம்.

ஆனால், சில வெளிப்புற சவால்களும் உள்ளன. உலகளாவிய தேவை குறைவு, அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் கட்டணத் தகராறுகள், மூலதன வரவுகளில் பாதிப்பு போன்றவை இந்திய பொருளாதாரத்துக்கு சவாலாக உள்ளது இருக்கக்கூடும். அதே நேரத்தில், குறைந்த மறைமுக வரிகள் உள்நாட்டு தேவையை உயர்த்த உதவினாலும், ஏற்றுமதியில் ஏற்படும் சரிவு சாதகமாக அமையாது என அறிக்கை எச்சரிக்கிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!