பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், 8.2% வட்டி வழங்குகிறது. பெற்றோர்/பாதுகாவலர்கள் தங்கள் மகள்களின் பெயரில் வங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கலாம். வரி விலக்கு உட்பட பல சலுகைகள் உண்டு.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் பாதுகாக்க அரசு அறிமுகப்படுத்திய சேமிப்புத் திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY). இது ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் மகள்களின் பெயரில் வங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் இந்த கணக்கைத் தொடங்கலாம். தற்போது 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
தகுதிகள்
பெண் குழந்தை இந்தியக் குடிமகளாக இருக்க வேண்டும்
குழந்தையின் வயது 10 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு கணக்குகள் திறக்கலாம்
குழந்தையின் சட்டபூர்வ பாதுகாவலர் மட்டுமே கணக்கு தொடங்கலாம்
தேவையான ஆவணங்கள்
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
பாதுகாவலரின் அடையாளச் சான்று + முகவரிச் சான்று
ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறந்தால் மருத்துவச் சான்றிதழ்
தேவைப்பட்டால் கூடுதல் ஆவணங்கள்
சுகன்யா சம்ரிதி யோஜனாவின் பலன்கள்
பெற்றோர் / பாதுகாவலர், குழந்தையின் பெயரில் பாதுகாப்பான முதலீடு செய்யலாம்
வரி விலக்கு (வருமான வரிச் சட்டம் 80C) – ஆண்டு ரூ.1.5 லட்சம் வரை
நீண்டகால முதலீட்டு திட்டம் – ஆண்டுதோறும் பணம் செலுத்தலாம்
குழந்தைக்கு 21 வயது வரையிலும் சேமிக்கலாம்
18 வயதுக்குப் பிறகு பகுதி தொகையை எடுக்கலாம் (திருமணம் / கல்விக்காக)
குழந்தைக்கு 14 வயது வரை எந்தத் தொகையும் எடுக்க முடியாது
மொத்தத்தில், பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு பாதுகாப்பான சேமிப்புத் திட்டம் தேடுகிற பெற்றோருக்கு SSY ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.