எகிறி குதித்த காளை; பொங்கிய சென்செக்ஸ், நிப்டி; இன்று மட்டும் முதலீட்டாளர்கள் சம்பாதித்தது 3 லட்சம் கோடி!!

By Dhanalakshmi G  |  First Published Jan 12, 2024, 4:03 PM IST

சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து இன்று 72,589.35 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேசமயம் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு அதிகரித்து நிஃப்டி  21,900 புள்ளியை தொடுவதற்கு காரணமாக அமைந்தன.


மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனம் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அதிகரித்து ரூ.372.92 லட்சம் கோடியாக இன்று உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பில், இந்திய பங்குச் சந்தை சுமார் 4.49 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. இத்துடன், பங்குச் சந்தையில் உலகின் நான்காவது பெரிய சந்தையாக இருக்கும் ஹாங்காங்கை இந்தியப் பங்குச் சந்தை  விரைவில் முந்திச் செல்லும் என்று தெரிய வந்துள்ளது. 

நிப்டி என்று அழைக்கப்படும் தேசிய பங்குச் சந்தையில் இன்று ஐடி நிறுவனங்களின் மதிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ் மதிப்பு 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து டெக் மகேந்திரா, விப்ரோ,  மெப்சிஸ், எல்டிஐமின்ட்டிரீ ஆகிய பங்குகளின் மதிப்பு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 

Latest Videos

undefined

பங்குச் சந்தை உயர்வுக்கு காரணங்கள் என்ன?
* ஐடி நிறுவன பங்குகளை வாங்குவதற்கு இன்று சந்தையில் போட்டி நிலவியது. இதன் காரணமாக இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்து, டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயரத் தொடங்கியது.

ஜன.,31இல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்.,1இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

* ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து நன்றாக செய்து வந்தாலும், கடந்த மாதங்களில் செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்களின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும் என்ற சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவே ஐடி நிறுவன பங்குச் சந்தை மதிப்பு உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது..

உலகளாவிய சந்தைகள்
அமெரிக்காவில் பணவீக்கம் இருந்தபோதும், பெரியளவில் எந்த மாற்றமும் இல்லாமல், சாதகமாக பங்குச் சந்தை வர்த்தகம் நடந்துள்ளது. ஜப்பானின் Nikkei பங்குச்சந்தை சராசரியாக வெள்ளிக்கிழமை 34 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

சில்லறை முதலீட்டளர்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை உயர்வுக்கு காரணமாக இருந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 1600 கோடி அளவிற்கு வாங்கும் சக்தி கொண்டவர்களாக இருந்துள்ளனர். 

பொதுத்துறை வங்கிகளில், பாங்க் ஆப் இந்தியா 5%க்கு மேல் லாபம் ஈட்டியது. யூனியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கிகளும் 4-5% லாபம் ஈட்டின.  

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மகிழ்ச்சி செய்தி!! சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கும்!

click me!