Stock Market Today: பங்குச்சந்தை 2வது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி சரிவு:அதானி என்டர்பிரைசர்ஸ் லாபம்

By Pothy RajFirst Published Feb 7, 2023, 4:03 PM IST
Highlights

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ந்தன.

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ந்தன.

அமெரிக்காவின் ஜனவரி மாதத்தில் வேலைநிலவரம் அந்நாட்டுப் பொருளாதாரம் கடும்நெருக்கடியில் இருப்பது காண்பிக்கிறது.

இதனால் அடுத்துவரும் நிதிக்கொள்கைக் கூட்டங்களில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை 25 புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளது. இதனால் அமெரிக்க சந்தையில் கடந்த சில நாட்களாகவே முதலீட்டாளர்கள் ஆர்வமின்றி வர்த்தகத்தில்ஈடுபடுகிறார்கள். 

அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு

இந்த தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்ட முடிவு நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் 25 புள்ளிகள் வட்டி உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர், புதிதாக பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், லாபம் ஈட்டுவதிலேயே ஆர்வத்தை செலுத்தினார்கள்

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி மந்தம்! அதானி பங்கு வீழ்ச்சி

இதனால் காலை வர்தத்கம் தொடங்கியதில் இருந்து பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக நடந்தது. வர்த்தகத்தின் இடையே 200 புள்ளிகள் வரை மீண்டாலும் பிற்பகலுக்குப்பின் மீண்டும் சரிவில் சென்றது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 220 புள்ளிகள் குறைந்து, 60,286 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குசந்தையில் நிப்டி 43 புள்ளிகள் சரிந்து, 17,721 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

நிப்டி துறையில் வங்கித்துறை மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்படித்து உயர்ந்தது. மற்ற அனைத்து துறைப் பங்குகளும் சரிந்தன.

மும்பை பங்குசந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில், 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன, 9 நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன. கோடக்வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ்பைனான்ஸ், பஜாஜ்பின்சர்வ், லார்சன்அன்ட் டூப்ரோ, ஐடிசி, பவர்கிரிட், எச்டிஎப்சி ஆகிய பங்குகள் மதிப்பு உயர்ந்தது.

அமெரிக்காவின் ஜேபி மோர்கன் கடன் தர நிறுவனம் அதானி குழுமம் இன்னும் கடன் பெறுவதற்கு தகுதியானதுதான் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று அதானி குழுத்தின் அதானி டிரான்ஸ்மிஷன், அதானி என்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட பங்குகள் மதிப்பு உயர்ந்தது. குறிப்பாக அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குவிலை 15 சதவீதம் உயர்ந்தது.


 

click me!