Share market: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு - இதுதான் காரணம்

Published : Jun 13, 2025, 05:28 PM IST
sensex

சுருக்கம்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் மற்றும் உலக வர்த்தக நிலவரங்கள் காரணமாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 573 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 169 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தன.

வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 573 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிஃப்டி 24,750 புள்ளிகளில் வர்த்தகமானது. இந்திய பங்கு சந்தைகள் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டன. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போர் பதற்றம், மற்றும் உலக வர்த்தக நிலவரங்கள் முதலீட்டாளர்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தியதால் சந்தைகள் சரிந்தன.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

சந்தைகளை விட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியதால் அனைத்து துறை பங்குகளும் சரிவடைந்தன.இந்தியா VIX 7% க்கும் அதிகமாக உயர்ந்தது, இது சந்தை பதற்றம் பெரிதாக இருப்பதைக் காட்டியது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 573.38 புள்ளிகள் குறைந்து 81,118.60 ஆகவும், நிஃப்டி 169.60 புள்ளிகள் குறைந்து 24,718.60 ஆகவும் முடிந்தது. வர்த்தகத்தன் போது 1,520 பங்குகள் உயர்ந்தன, 2,326 பங்குகள் விழுந்தன, மற்றும் 124 மாற்றமின்றி இருந்தன.

முக்கிய காரணிகள்

இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என கூறியதால் பொருளாதார பாதிப்பு நீடிக்கலாம்.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 12% உயர்ந்து 78 டாலராக உள்ளது.

இரான், ஹார்மூஸ் நீரிணையை முடக்கியால் விலை மேலும் உயரும் அபாயம்

துறை சார்ந்த பங்குகள் நிலவரம்

Nifty PSU Bank – 1.51%, Nifty Metal – 1.23%, Nifty Bank – 1.17% சரிவடைந்தன. FMCG, தனியார் வங்கி, எனர்ஜி, உள்கட்டமைப்பு துறைகளும் 1% வரை சரிவடைந்தன. Midcap & Smallcap 100 – முறையே 0.4% மற்றும் 0.5% குறைந்தன. Nifty IT – நிலையாக முடிந்தது.

பங்குகள் விலை

டிபென்ஸ் பங்குகள் – இஸ்ரேல்-இரான் பிரச்சனை காரணமாக 2.5% வரை உயர்ந்தன (Bharat Electronics முதலானவை), ஷிப்பிங் பங்குகள் – Shipping Corp of India, GE Shipping போன்றவை 10% வரை உயர்ந்தன (மத்திய கிழக்கில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு எதிர்பார்ப்பு காரணம்). Adani Ports, Hindalco, IndusInd Bank, SBI, ITC ஆகியவை கடும் சரிவை சந்தித்தன.

இந்தியா மிகப்பெரிய தனியார் ஏர்லைனான IndiGo-வின் பங்குகள் இன்று 6% வரை வீழ்ச்சி கண்டன. காரணம், அதன் நிறுவனமான InterGlobe Aviation-இல் முக்கிய பங்கு வைத்துள்ள நிறுவனர் குழு (Promoters), $1 பில்லியன் மதிப்பில் பங்கு விற்பனைக்கு திட்டமிட்டு உள்ளனர் என்ற செய்தி வெளியானதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

முதலீட்டாளர்கள் தற்போது கவனமுடன் முதலீடு செய்ய வேண்டும் எனவும் மத்திய கிழக்கு பிரச்சினை நீடிக்குமானால், இந்திய பங்குச் சந்தைகள் மேலும் பாதிக்கப்படலாம் என்றும் பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு