sri lanka economic crisis : இலங்கையில் உள்ள பங்குச்சந்தை இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பங்குச்சந்தை இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியம்
undefined
இலங்கை அரசு கடும் பொருளாதாரச் சிக்கலிலும், நிதிநெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து விடுபடுவதற்காக சர்வதேச நிதியத்திடம் சென்று நிதியுதவி கோர இலங்கை அரசு தரப்பில் அதிகாரிகள் சென்றுள்ளனர். இதையடுத்து, இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.30ஆயிரம் கோடி
இலங்கை அரசு சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிதிஅமைச்சர் அலி சாப்ரி தலைமையிலான குழுவினர்தான், அமெரிக்காவுக்கு சர்வதேச நிதியத்திடம் பேச்சு நடத்த சென்றுள்ளனர். 19ம் தேதி முதல் 24ம் தேதிவரைசர்வதேச நிதியத்திடம் பேச்சு நடத்தி உதவி கோர உள்ளனர்.
தற்போதைய நிலையில் இலங்கை அரசுக்கு அவசரஉதவியாக ரூ.30ஆயிரம் கோடி(400 கோடி டாலர்) தேவைப்படுகிறது.
இலங்கை அரசுக்கு தற்போது 5100 கோடி டாலர் வெளிநாட்டுக் கடன் இருக்கிறது. அரசு தரப்பில் வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் அளித்து கடன் வாங்கியது, சர்வதேச நிதியத்திடம் கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவற்றுக்காக கடன் பெற்றது என 5100 கோடி டாலர் நிலுவை இருக்கிறது. ஆனால், இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சிக்கலால் இப்போதைய நிலையில் கடன் தொகையை செலுத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்துவிட்டது.
துயரத்தில் மக்கள்
இதைத் தொடர்ந்துதான் சர்வதேச நிதியத்திடம் அவசர உதவி கோர இலங்கை பிரநிதிகள் சென்றுள்ளனர். கடந்த 1948ம் ஆண்டுக்குப்பின் இலங்கை அரசு சந்திக்கும் மிகப்பெரிய கடன் பிரச்சினை, கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையும் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் மிகமோசமான பொருளாதாரச் சிக்கலால் 2.20 கோடி மக்களும் தினசரி 12மணிநேரம் மின்வெட்டால் பாதிக்கப்படுகிறார்கள், உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது, பெட்ரோல், டீசல், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு வாரம் விடுமுறை
இலங்கைப் பிரதிநிதிகள் அனைவரும் சர்வதேச நிதியத்தைச் சந்திக்கச் செல்வதால், இலங்கையில் உள்ள பங்குச்சந்தைக்கு இந்த வாரம் அதாவது 18ம் தேதி முதல் 22ம் தேதிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தற்போதுள்ள பொருளாதார சூழல் குறித்து தெளிவாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், முதலீட்டு தொடர்பான முடிவுகளை எடுக்கவும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
கடன் சுமையாலும், பொருளாதார நெருக்கடியாலும் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 50 கோடிடாலர் அளவுக்கு பெட்ரோல், டீசல் எரிபொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. இது தவிர 100 கோடி அளவுக்கு கடனும், கூடுதலாக 100 கோடி அளவுக்கு உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், மருந்துகள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது