sri lanka crisis: இலங்கைக்கு போகாதீங்க! தீவிரவாத தாக்குதல் அபாயம்: மக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

By Pothy Raj  |  First Published Apr 7, 2022, 11:37 AM IST

sri lanka crisis:இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால் உண்டான அமைதியற்ற சூழல், உள்நாட்டுக் குழப்பம் போன்றவற்றால், அமெரிக்க மக்கள் யாரும் இலங்கைக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசு தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால் உண்டான அமைதியற்ற சூழல், உள்நாட்டுக் குழப்பம் போன்றவற்றால், அமெரிக்க மக்கள் யாரும் இலங்கைக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசு தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடி

Tap to resize

Latest Videos

இலங்கையில் கொரோனா பரவலின்போது சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துவிட்டதால், அந்நியச் செலவாணி வரத்து முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. இலங்கையின் ஜிடிபியில் சுற்றுலாத்துறையின் பங்கு முக்கியமானது. அந்நியச் செலவாணி பற்றாக்குறையால் பல்வேறு நாடுகளில் இருந்து கடன் பெற்று அரசை நடத்தும் நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது.

இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அந்நியச் செலவாணி கையிருப்புகுறைந்து அத்தியாவசியப் பொருட்கள் எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையஸ் கேஸ் சிலிண்டர் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன. டீசல் பற்றாக்குறையால் மின்சார உற்பத்தி செய்ய முடியாமல் நாடே இருளில் மூழ்கியது. தினசரி 13 மணிநேரம் மின்வெட்டை மக்கள் எதிர்கொண்டனர். 

போராட்டம் வன்முறை

இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கியால்,கலவரம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு அவசரநிலையைக் கொண்டு வந்தது. இந்தியா தரப்பில் ஏராளமான உதவிகள் செய்யப்பட்டதையடுத்து, ஓரளவுக்கு இயல்புநிலை திரும்புகிறது.
மேலும் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள் இல்லாததால் நோயாளிகளைச் சமாளிப்பது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இதனால் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றன.

அமெரிக்கா எச்சரிக்கை

இதுபோன்ற அமைதியற்ற சூழல் இலங்கையில் நிலவுவதால் அமெரிக்க மக்கள் யாரும் இலங்கைக்கு சுற்றுலாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

இது குரித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் “ இலங்கையில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. கொரோனா வைரஸ் பரவல், எரிபொருள் விலை உயர்வு, மருந்துப் பற்றாக்குறை ஆகிய நிலவுகின்றன. மக்களிடையே ஒருவிதமான கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் தீவிரவாதம் பரவுவத்கான சூழலும் இருக்கிறது. ஆதலால் இலங்கைக்கு பயணிக்க திட்டமிட்டிருந்த மக்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

கொரோனா அச்சம்

மேலும் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு இலங்கைக்கு செல்லும் மக்களுக்கு 3வது கட்ட சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை, பரவல் தீவிரமடையும் சூழல் இருப்பதாக எச்சரித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், கொரோனாவில் பாதிக்கப்பட்டால் அதற்கான தீவிரமான அறிகுறிகள் குறைவாக இருக்கும்.

இருப்பினும் , சர்வதேச பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க மக்கள் சிடிசியின் அறிவுரைகள், பரிந்துரைகளை கேட்டு செல்லலாம்.
இலங்கையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. நோயாளிகளுக்கு மருந்துகள் இல்லை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாத கடினமான பொருளாதார சூழலில் இருக்கிறது. 

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து இலங்கை முழுவதும் மக்கள் சமீபத்தில் அமைதியாகப் போராடினார்கள். சில இடங்களில்மட்டுமே வன்முறை வெடித்தது. மேலும், மின்சாரத் தட்டுப்பாடும், பொதுப்போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. ஆதலால், இலங்கையின் சூழல் குறித்து ஊடகங்களில் செய்திகளை அறிந்து கொண்டு திட்டமிடுங்கள். இலங்கைக்கு பயணம் செய்திருப்பதும், தள்ளிப்போடுவதையும் அறிவுறுத்துகிறோம்

தீவிரவாத தாக்குதல்கள்

எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி தீவிரவாத தாக்குதல்கள் சுற்றுலா இடங்கள், போக்குவரத்து முனையங்கள், சந்தைகள், ஷாப்பிங் மால், அரசு அமைப்புகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட், வழிபாட்டுத்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், விமானநிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளில் நடத்தப்படலாம். ஆதலால், இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

click me!