fdi in chennai:சென்னைக்கு இப்படி ஒரு அந்தஸ்தா! உலகின் மலிவான அன்னிய முதலீட்டுக்கு உகந்த நகரம்: எதில் தெரியுமா?

By Pothy RajFirst Published Apr 7, 2022, 10:49 AM IST
Highlights

fdi in chennai: மின்னணு பிரிவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு உலகிலேயே மிகவும் மலிவான அந்நிய முதலீட்டுக்கு சிறந்த நகரமாக சென்னை இடம் பெற்றுள்ளது. 

மின்னணு பிரிவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு உலகிலேயே மிகவும் மலிவான அந்நிய முதலீட்டுக்கு சிறந்த நகரமாக சென்னை இடம் பெற்றுள்ளது. 

புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கடுமையாக முயன்றுவரும்நிலையில் இதுபோன்ற அந்தஸ்து அரசின் முயற்சிக்கு ஊக்கமாக அமையும்.

அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீட்டான மதிப்பீட்டின்படியும், முதலீட்டுக்கான சரியான இடம் குறித்தஒப்பீடுஅளவிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி உலகிலேயே மின்னணு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சிறந்த 100 முக்கியமான நகரங்களை வரிசைப்படுத்தியதில்  ஆராய்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உகந்த நகரமாகவும், அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கும் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.

50 நபர்களைக் கொண்ட மின்னணு சார்ந்த ஒருநிறுவனத்தை சென்னையில் நடத்த 12.40 லட்சம் டாலர் ஆண்டுக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-வது இடம் மலேசியா

2-வது இடத்தில் மலேசியாவில் உள்ள பெனாங் நகரம் இடம்பெற்றுள்ளது.இங்கு மின்னணு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு 13.20 லட்சம் டாலர்கள் போதுமானது. குர்கோவன் நகரில் ஆண்டு முதலீடாக 15.20 லட்சம் டாலர் தேவை. புனே நகரில் 15.30 லட்சம் டாலர் இருந்தால் மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி விடலாம். 

உலகளவில் 2-வது இடம்

உலகளவில் ஒப்பிடும்போது தென் கொரியாவின் சியோல் நகரம் முதலீடத்திலும்,2-வதாக சென்னை 2-வது இடத்திலும் உள்ளன. சியோல் நகரில்தான் புகழ்பெற்ற சாம்சங், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளன. சென்னைக்கு அடுத்தார்போல், சீனாவின் குவாங்சூ மற்றும் சென்ஜென் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. டாப்10 நகரங்களுக்கான பட்டியலில்  பெங்களூரு, புனே, குர்கோவன் நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் அந்நிய நேரடி முதலீட்டையும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் கவர்வதற்காக ஆளும் திமுக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பு பெரும் ஊக்கமாக அரசுக்கு அமையும்.

2023ம் ஆண்டில் நடத்த உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு சென்னைக்குக் கிடைத்திருக்கும் இந்த அந்தஸ்து உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அந்நிய நேரடி முதலீட்டை 41.5 சதவீதம் ஈர்க்கவும் உதவும்.

தமிழகஅ சுக்கு ஊக்கம்

தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ கடந்த 2019ம் ஆண்டிலிருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் 5000 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அரசு 130 புரி்ந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.68ஆயிரத்து 375 கோடி முதலீடு ஈர்க்கப்படும். 20 லட்சத்து 5ஆயிரத்து 802 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புக் கிடைக்கும். 

சமீபத்தில் ஐக்கிய அரபுஅமீரகத்துக்கு பயணம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.6 ஆயிரம் கோடிக்கான முதலீட்டுக்கு அடித்தளமிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!