sri lanka crisis: 1948-ம் ஆண்டுக்குப்பின் இலங்கை சந்திக்கும் மோசமான பொருளாதாரச் சிக்கல்: பிபிசி கூறுவதென்ன?

By Pothy Raj  |  First Published Apr 11, 2022, 4:52 PM IST

sri lanka crisis:  இலங்கையில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு, விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வு, தினசரி பலமணிநேரம் மின்வெட்டு என கடந்த 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிற்கு பின் மிகமோசமான பொருளாதாரச் சிக்கலை தற்போது இலங்கை சந்தித்து வருகிறது.


இலங்கையில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு, விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வு, தினசரி பலமணிநேரம் மின்வெட்டு என கடந்த 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிற்கு பின் மிகமோசமான பொருளாதாரச் சிக்கலை தற்போது இலங்கை சந்தித்து வருகிறது.

குற்றச்சாட்டு

Tap to resize

Latest Videos

இந்த பொருளாதாரச் சிக்கலுக்கு அரசின் தவறான நிர்வாகமும், பொருளாதாரத்தை தவறாகவும், மோசமாகவும் கையாண்டதும் காரணம் என மக்கள் குற்ற்சாட்டுகிறார்கள். இந்த அவலநிலைக்குதேசத்தைக் கொண்டுவந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிவிலகக் கோரி தினசரி இலங்கையின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்

ஒரே காரணம்

ஆனால் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரச் சிக்கலுக்கும், திவாலாகும் நிலைக்கும் ஒரே காரணம் அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாதது மட்டும்தான். செலாவணி கையிருப்பு மட்டும் இருந்தால் இலங்கை இந்தநிலைக்கு வந்திருக்காது. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், உணவு, எரிபொருள், மருந்துகள் என எதையுமே இலங்கை அரசால் இறக்குமதி செய்ய முடியவில்லை.

நாட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்துதான் மக்கள் நுகரவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், தட்டுப்பாடுள்ள பொருட்களின் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் இதுநாள்வரை தாங்கள் சேமித்துவைத்த நகைகள், சொத்துக்களை விற்றுத்தான் அன்றாட பிழைப்பு நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சுற்றுலாபாதிப்பு

கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பு நகரில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்குப்பின் சுற்றுலாப்பயணிகள் வருகை இலங்கையில் குறையத் தொடங்கியது. இலங்கைக்கு பெரும்பகுதி அந்நியச் செலவாணி ஈட்டித் தருவதே சுற்றுலாத்துறைதான், அந்தத் துறையில் அடி விழுந்தபோது மற்ற துறைகள் ஆட்டம் காணத் தொடங்கின.

பொருளாதாரத்தை தவறாக ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் கையாண்டார்கள், நிர்வகித்தார்கள் என பல்வேறு பொருளதார நிபுணர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.ஆனால்,இலங்கையின் இந்த சீரழிவு நிலைக்கு பல காரணங்கள் உள்ளன.

உள்நாட்டுப் போர்

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009ம் ஆண்டுதான் முடிந்தது. இந்த உள்நாட்டுப் போர் இலங்கையின் பொருளாதாரம் சீரழிவுக்கு முக்கியக் காரணம். இந்த போரில் வெல்வதற்காக இலங்கை அரசு பல கோடிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களையம், கடன்களையும் வாங்கி தங்களை தாங்களே கடனாளியாக்கியது.

ஏற்றுமதி மீது கவனம் இல்லை

அதுமட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நியச் செலவாணி முக்கியம் என்பதைமறந்து உள்நாட்டு சந்தையில் மட்டுமே கவனம் செலுத்தியது 2-வது தவறாகும்.

வர்த்தகப் பற்றாக்குறை

3வதாக ஏற்றுமதி மீது கவனம் செலுத்தாததால் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலவாணி குறைந்தது. ஆனால், இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்ததால், வர்த்தகப் பற்றாக்குறை இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது.இது இலங்கை பெரும் கடனில் தள்ளியது.

தேவையில்லாத செலவு

4-வதாக சீனாவுடன் நெருக்கம் காட்டியதால், தேவையில்லாத உள்கட்டமைப்புத் திட்டங்களை இலங்கை அரசு தொடங்கி, அதில் அளவுக்கு அதிகமான அந்நியச் செலாவணியை முதலீடு செய்தது. இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் முடித்தபின் நீண்டகாலத்திலும்லாபம் ஏதும் இல்லை என்பதைத் தெரிந்தும் இலங்கை அதில் கவனம் செலுத்தியது.

சரிவு தொடங்கியது

விளைவு 2019ம் ஆண்டு இறுதியில் இலங்கையடம் 760 கோடி டாலர் அந்நியச் செலாவணி மட்டுமே கையிருப்பு இருந்தது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இது 230 கோடி டாலராகக்குறைந்தது. 

அதிபராக கோத்தபய ராஜபக்ச 2019ம் ஆண்டு பதவிக்கு வந்தபின், ஏராளமான வரிச்சலுகைகளை அளித்து, வரிகளை ரத்து செய்தார். இதனால் அரசுக்கு வருவாய் குறைந்தது, அரசால், வெளிநாட்டுச் சந்தையில் கரன்ஸியைக் கொடுத்து டாலரைக் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தவறான முடிவு

இலங்கையில் உள்நாட்டு கரன்ஸி பற்றாக்குறை 2021ம் ஆண்டில் மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கியது. இலங்கையிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு கரன்ஸிகள் அனைத்தையும் அரசு தடுத்தது. அதாவது வெளிநாடுகளில் இருந்து உரங்கள் இறக்குமதி அனைத்தையும் நிறுத்தியது, விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாறக் கூறியது.

இயற்கை விவசாயம்

உரம், பூச்சிகொல்லி மருந்து இறக்குமதிக்கு அதிகமான டாலர்களை செலவிடுவதால், வேறுவழியின்றி இவற்றின் இறக்குமதியை இலங்கை நிறுத்தியது. இயற்கை விவசாயத்தில் முறையான பயிற்சியின்றி விவசாயத்தை தொடங்கிய விவசாயிகளுக்கு இழப்பு மிக மோசமாக இருந்தது. 

இயல்பான விளைச்சல் கூடஇல்லை. விளைவு நாட்டில் உணவுப் பற்றாக்குறையும் தலைவிரித்தாடத் தொடங்கியது. இதனால் உணவுப் பொருட்களைக்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. ஆனால், இறக்குமதி செய்யக்கூடி அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், இந்தியா, சீனா போன்ற அண்டை நாடுகளிடம் கையேந்துகிறது.

ஒட்டுமொதத்தில் இலங்கையி்ன் மோசமான சீரழிவுக்குக் காரணம் அந்நியச் செலவாணி கையிருப்புஇல்லாதது, கடன் அதிகரிப்பு, இறக்குமதி அதிகரிப்புதான்.
 

click me!