வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை: பெருவாரியாக ஆதரவு: காரணம் என்ன? கருத்துக்கணிப்பு சொல்வதென்ன?

Published : Apr 11, 2022, 02:59 PM ISTUpdated : Apr 11, 2022, 03:00 PM IST
வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை: பெருவாரியாக ஆதரவு: காரணம் என்ன? கருத்துக்கணிப்பு சொல்வதென்ன?

சுருக்கம்

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை எனும் திட்டத்துக்கு இந்தியாவில் உள்ள பெருவாரியான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை எனும் திட்டத்துக்கு இந்தியாவில் உள்ள பெருவாரியான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

காரணம்

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும்போது மனஅழுத்தம் குறையும், வேலைக்கும், குடும்பத்துக்கும் இடையே சமநிலையை பராமரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு துறைகள்

மனித வள அமைப்பான ஜீனியஸ் கன்சல்டேஷன் எனும் அமைப்பு வாரத்துக்கு 4 நாட்கள் வேலை குறித்து இந்தியாவில்  ஆய்வு நடத்தி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவிபிப்ரவரி 1 முதல் மார்ச் 7ம் தேதிவரை, 1,113 ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில், வங்கித்துறை, நிதித்துறை, கட்டுமானம், கல்வி, பொறியியல், எப்எம்சிஜி, சுற்றுலா, மனிதவளம், தகவல்தொழில்நுட்பம், உற்பத்தித்துறை, சரக்குப்போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆன்-லைன் மூலம் கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர்.

ஏகோபித்த ஆதரவு

இந்த ஆய்வில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை செய்ய விருப்பமா என்ற கேள்விக்கு 100 சதவீதம் ஊழியர்களும் இந்தத் திட்டத்துக்கு முழுமையாக ஆதரவு அளித்துள்ளனர்.

12 மணிநேரத்துக்கும் மேலாக பணியாற்றி, அதற்குப்பதிலாக மறுநாள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் திட்டம் குறித்த கேள்விக்கு, 56 சதவீதம் பேர் சம்மதம் தெரிவித்தனர். 44சதவீதம் பேர் வழக்கமான  பணிநேரத்துக்கும் அதிகமாக பணியாற்ற மறுத்துவிட்டனர்.

ஆனால், இந்த ஆய்வில் பங்கேற்ற ஊழியர்களில் 60 சதவீதம் பேர் கூடுதல் நேரம் பணியாற்றி மறுநாள் விடுப்பு எடுத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன

ஆய்வில் பங்கேற்றவர்களில் 66சதவீதம் பேர், வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை என்பது, உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மன அழுத்தம், வெறுப்பு ஆகியவற்றைக் குறைக்கவும், வேலைக்கும் குடும்பத்துக்கும் இடையே சமநிலையை பராமரி்க்கவும் 4நாட்கள் வேலை உதவும் எனத் தெரிவித்துள்ளனர்.

4 நாட்கள் வேலைத் தவிர்த்து மீதமிருக்கும் 3 நாட்கள் விடுப்பு எப்படி எடுக்க விருப்பம் என்ற கேள்விக்கு வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் விடுப்பு 52 சதவீதம் பேரும், சனி,ஞாயிறு திங்கள் என 18 சதவீதம் பேரும், புதன்கிழமை என 18 சதவீதம் பேரும், வியாழக்கிழமைக்கு 11 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்

வேண்டாம் 4 நாட்கள் வேலை

ஆனால், ஆய்வில் பங்கேற்றவர்களில் 27 சதவீதம் பேர், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் பணியாற்றினால், உற்பத்தி அதிகரி்க்கும் என்று நினைக்கவில்லை. 11 சதவீதம் பேர் இந்த திட்டம் ஒருபோதும் நிறுவனத்துக்கும், ஊழியர்கள் வளர்ச்சிக்கும் உதவாது  எந்தவிதமான சாதகமான முடிவுகளையும் தராது எனத் தெரிவித்துள்ளனர்

அதிகளவில் விருப்பம்

ஜீனியஸ் கன்சல்டேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் யாதவ் கூறுகையில் “ வாரத்துக்கு 4 நாட்கள் வேலை எனும் திட்டம் மிகவும் ஸ்வாரஸ்யமானது. இந்த திட்டத்தை பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், அலுவலக வாழ்க்கையையும் திறம்பட பராமரிக்க முடிகிறது, சமநிலை கொடுக்க முடிகிறது என்று தெரிவித்துள்ளனர். ஏராளமானோர் 4 நாட்கள் திட்டம் மூலம் தன்னுடைய எல்லைக்கு அப்பாலும் நிறுவனத்துக்கு தேவையான வேலையை செய்ய முடிகிறது. சிறப்பாக பணியாற்ற முடிகிறது” எனத் தெரிவித்துள்ளனர்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!
பிக்சட் டெபாசிட்டுக்கு எந்த வங்கி அதிக வட்டி தருது தெரியுமா? முழு விபரம் உள்ளே!