
மும்பைப் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஏறக்குறைய 8% வளர்ச்சியுடன் நகர்ந்து வருகின்றன. கடந்த வாரத்தில் தொடர்ந்த வீறுநடை இந்த வாரத்திலும் அதானி குழுமத்துக்கு தொடர்கிறது.
அந்நிய முதலீடு
ஐக்கிய அரபுஅமீரகத்தைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம்(ஐஹெச்சி) அதானி குழுமத்தின் 3 நிறுவனங்களில் 730 கோடி டாலர முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
செபியில் அறிக்கை
அதானி க்ரீன் எனர்ஜியில் ரூ.3,850 கோடி, அதானி டிரான்ஸ்மிஷனில் ரூ.3,850 கோடி, அதானி என்டர்பிரைசஸில் ரூ.7,700 கோடி ஆகியவற்றை ஐஹெச்எல் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. தேவையான அனைத்து ஒப்புதல்களும் வழங்கப்பட்டுவிட்டால், முதலீடு பரிமாற்றம் அடுத்த ஒரு மாதத்துக்குள் முடிந்துவிடும். இந்த முதலீடு வர்த்தகத்துறை வளர்ச்சிக்கும், வரவு செலவு அறிக்கையை ஸ்திரப்படுத்தவும் பயன்படும் என்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
8 % வளர்ச்சி
இந்த அறிக்கையில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் விலை 8 சதவீதம் உயர்ந்து ரூ.2,520 ஆக அதிகரித்தது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் விலை 6 சதவீதம் உயர்ந்து, ரூ.2,696க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 2 நாட்கள் வர்த்தகத்தில் மட்டும் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவநனத்தின் பங்குகள் விலை 6 சதவீதம் அதிகரித்து, 2,294க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 9 சசவீதம் லாபமீட்டியுள்ளது.
இதர பங்குகள்
இது தவிர அதானி பவர் பங்குகள் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.231.70ஆகவும், அதானி வில்மர் பங்குகள் விலை 5 சதவீதம் உயர்ந்து, ரூ.577.30 ஆகவும் நகர்ந்து வருகிறது. அதானி டோட்டல் கேஸ் 7 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ.2599 ஆகவும், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒரு சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ.845 ஆகவும் இருக்கிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.