இனிமேல் இவர்கள் சிரமப்படவேண்டாம்; சென்னை உள்பட 30 ரயில்நிலையங்கள் தயாராகிறது

By manimegalai aFirst Published Feb 9, 2022, 11:45 AM IST
Highlights

சென்னை எழும்பூர் உள்பட நாட்டின் 30 ரயில்நிலையங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ஏராளமான வசதிகளுடன் தயாராகிறது இதற்காக ஸ்டான்டர்ட் சாட்டர்ட் வங்கி, அனுப்பிரயாஸ் மற்றும் சம்மார்த்தனம் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது.


சென்னை எழும்பூர் உள்பட நாட்டின் 30 ரயில்நிலையங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ஏராளமான வசதிகளுடன் தயாராகிறது இதற்காக ஸ்டான்டர்ட் சாட்டர்ட் வங்கி, அனுப்பிரயாஸ் மற்றும் சம்மார்த்தனம் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது.

சீயிங் இஸ் பிலிவ்விங் என்ற தலைப்பில் ஸ்டார்டர்ட் சாட்டர்ட் வங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி பார்வை மாற்றுத்திறனாளிகள் ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும்போது தேவையான வசதிகளை உண்டாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள், செவித்திறன் குறைவாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் என மற்றவர்களைச் சாராமல் தாங்களாகவே ரயில்நிலையம் வந்து செல்லும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ப்ரெய்லி முறையில் பலகைகள், அறிவிப்புகள் நடைமேடையில் உருவாக்கப்படும். இதன் மூலம் அவர்கள் நடைமேடை எண், வசதிகளை தெரிந்து கொள்ள முடியும்

ப்ரெய்லி மூலம் அறிவிப்புகளை வெளிப்படுத்தி, ஆண்-பெண் கழிவறைகளை அடையாளம் காணும் வசதி. பார்வை குறைவு இருப்பவர்கள் தெரிந்து கொள்ள பிரதிபலிக்கும் பலகைகள். ரயில்நிலையம் குறித்த ப்ரெயில் வரைபடம், ரயில்நிலையம் குறித்து அறிந்து கொள்ள க்யுஆர் கோட் மூலம் பேசுதல் மூலம் தெரிந்து கொள்ளுதல், சரிவான படிகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் ரயில்வே பெட்டிகளில் செய்யப்பட உள்ளன

நாட்டிலேயே முதல்முறையாக மஹாராஷ்டிராவில் உள்ள தானே ரயில்நிலையம்தான் மாற்றுத்திறனாளிகளுக்காக அனைத்து வசதிகளுடன் உருவாக இருக்கிறது. அதன்பின் வரும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் நாடுமுழுவதும் 30 ரயில்நிலையங்கள் தயாராகிவிடும். இதில் சென்னை எழும்பூர் ரயில்நிலையம், மும்பை பந்த்ரா, ஆக்ரா, ஜெய்பூர், அகமதாபாத், போபால், மதுரா, செகந்திராபாத் ரயில்நிலையங்களும் மாற்றுத்திறனாளிகள்வசதிகளுக்காக தயாராகின்றன.

click me!