
இந்தியாவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான கிரேயன் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்னோ பிளஸ் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 64 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு ஆண்டுகள் வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை பயன்படுத்த ஓட்டுனர் உரிமம், மற்றும் வாகன பதிவு உள்ளிட்டவைகளை செய்ய வேண்டாம். இந்த ஸ்கூட்டர் 155mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது. இதில் மொபைல் சார்ஜ் செய்ய யு.எஸ்.பி., செண்ட்ரல் லாக்கிங், ஆண்டி-தெஃப்ட் மற்றும் நேவிகேஷன் போன்ற வசதிகள் உள்ளன.
மேலும் அதிக கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ், டெலிவரி பணிகளுக்கு ஏற்ற கஸ்டமைசேஷன் வசதி வழங்கப்படுகிறது. புதிய ஸ்னோ பிளஸ் மாடல் ஃபியெரி ரெட், சன்ஷைன் எல்லோ, கிளாசிக் கிரே மற்றும் சூப்பர் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
"நகரங்களுக்குள் பயணிக்க லோ-ஸ்பீடு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சிறந்த தேர்வாக இருக்கின்றன. இந்திய சந்தையில் ஸ்னோ பிளஸ் மாடலை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஸ்கூட்டர்களின் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகின்றன. குறைந்த விலை, சிக்கல்கள் அற்ற சவுகரிய பயணத்தை இந்த ஸ்கூட்டர்கள் வழங்குகின்றன," என கிரேயன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் மயன்க் ஜெயின் தெரிவித்தார்.
லோ-ஸ்பீடு மாடல் மட்டுமின்றி எதிர்காலத்தில் அதிவேக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவும் கிரேயன் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இம்மாத இறுதியில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.