சிறிய ஓட்டல், ரெஸ்டாரன்ட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி -  ஜூலை 1-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது...

 
Published : Mar 04, 2017, 07:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
சிறிய ஓட்டல், ரெஸ்டாரன்ட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி -  ஜூலை 1-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது...

சுருக்கம்

small hotel and restaurant have a vat

ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் விற்றுமுதல்(டர்ன் ஓவர்) கொண்டுள்ள சிறிய ஓட்டல், ரெஸ்டாரன்ட், தாபாக்களுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) விதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், மத்திய ஜி.எஸ்.டி. இறுதி வரைவு சட்டம், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. இறுதி வரைவு சட்டம் ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதால், ஜூலை முதல்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி நாடுமுழுவதும் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வரி

நாடு முழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.

கவுன்சில்

இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 11-வது கூட்டங்களில் 4 வகையான 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

11-வது கூட்டம்

இந்நிலையில் 11-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்துக்கு பின், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் பேசியதாவது-

ஒப்புதல்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், முக்கிய வரைவு சட்டங்களான மத்திய ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ந்தேதி தொடங்கும் 12-வது கூட்டத்தில் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி. சட்டத்துக்கும் ஒப்புதல் பெறப்படும்.

ஒப்புதல்

மத்திய ஜி.எஸ்.டி. வரி என்பது மத்திய அரசு வரி விதிக்க வகை செய்யும் சட்டமாகும், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. என்பது மாநிலங்களுக்கு இடையிலான ஜி.எஸ்.டி.வரி ஆகும். இவற்றுக்கு பட்ஜெட் கூட்டத்த தொடர் தொடங்கியவுடன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும்.

அதிகபட்சம் 40 சதவீதம்

ஜி.எஸ்.டி. சட்டத்தில் ஏற்கனவே 4 வகையான வரி விதிப்புகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 40 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரி வீதம் குறித்து ஜி.எஸ்.டி.கவுன்சில் முடிவு செய்யும்.  இந்த அனைத்து சட்டங்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. சட்டம் நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன்.

5 சதவீதம்

குறிப்பாக ஆண்டுக்கு  ரூ.50 லட்சத்துக்கு விற்றுமுதல் இருக்கும் சிறிய ஓட்டல், ரெஸ்டாரன்ட், தாபா ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2.5 சதவீதத்தை மத்திய அரசும், மீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Smart Phone: பட்ஜெட் விலையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.! 2026-ன் டாப் 5 ஸ்மார்ட் போன்கள்.!
Agriculture: வருஷத்துக்கு சுளையா ரூ.10 லட்சம் கிடைக்கும்..! விவசாயிகளை லட்சாதிபதியாக்கும் சூப்பர் தொழில்..! தெரிஞ்சுகிட்டா நீங்களும் கில்லி..!