ஏகப்பட்ட எதிர்பார்ப்பு, இதுதான் ஸ்லேவியா விலை! ஸ்கோடா அசத்தல்

By Kevin KaarkiFirst Published Feb 28, 2022, 1:17 PM IST
Highlights

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா 1.0 TSI மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்கோடா ஸ்லேவியா 1.0 TSI மாடல் துவக்க விலை ரூ. 10.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்லேவியா மாடல் 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட மாடலும் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதன் விலை மார்ச் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் ஸ்லேவியா மாடலின்- ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இத்துடன் மேனுவல் அல்லது AT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஸ்லேவியா 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் AT டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் விலை ரூ. 15.39 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

"புதிய ஸ்லேவியா மாடலுக்கான முன்பதிவு துவங்கியது முதல் இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை ஸ்லேவியா பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து புதிய ஸ்லேவியா மாடல் ஒவ்வொரு மாதமும் 2500 முதல் 3 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்," என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார். 

இதில் உள்ள 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் AT டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 10.1 நொடிகளில் எட்டிவிடும். இதன் AT வேரியண்ட்- நார்மல் மற்றும் ஸ்போர்ட் என இருவித டிரைவ் மோட்களில் கிடைக்கிறது. 

புதிய ஸ்லேவியா மாடலில் உள்ள கிரில் குரோம் சரவுண்ட்களுடன் தோற்றத்தில், குஷக் மாடலில் உள்ள கிரில் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளன. இதன் உள்புறத்தில் அதிக இடவசதி கொண்ட கேபின், ஆர்ம்ரெஸ்ட், ரியர் ஏ.சி. வெண்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் பாயிண்ட்கள் உள்ளன. 

இத்துடன் 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், ஸ்கோடா கனெக்ட் செய்லி, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. வேரியண்டிற்கு ஏற்ப பல்வேறு ஸ்பீக்கர்கள், டுவீட்டர்கள் மற்றும் சப்-ஊஃபர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த காரில் 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஸ்டீரிங் வீல் கண்ட்ரோல்கள் உள்ளன.

பாதுகாப்பிற்கு புதிய ஸ்லேவியா மாடலில் ஆறு ஏர்பேக், ESC, எலெக்டிரானிக் டிஃபரென்ஷியல் சிஸ்டம் (EDS), ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. 

click me!