
ஸ்கோடா நிறுவன தலைவர் தாமஸ் ஸ்கேஃபர் தங்கள் நிறுவனத்தின் அடுத்த மூன்று எலெக்ட்ரிக் கார்கள் என்யாக் எஸ்.யு.வி. மற்றும் என்யாக் கூப் மாடல்களை விட அளவில் சிறியதாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.
புதிய என்யாக் கூப் iV மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பலவகை பயன்பாடுகளை வழங்கும் பி-ஸ்போக் எலெக்ட்ரிக் MEB பிளாட்ஃபார்மை பயன்படுத்தும் ஸ்கோடா நிறுவனத்தின் இரண்டாவது மாடல் ஆகும். இதைத்தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் ID 3 போன்ற அளவில் சிறிய செடான்-ஸ்டைல் காரை உருவாக்க ஸ்கோடா திட்டமிட்டு உள்ளது. மேலும் இது MEB எண்ட்ரி பிளாட்ஃபார்மில் முதல் மாடல் ஆகும்.
கடந்த ஆண்டு ஃபோக்ஸ்வேகன் ID லைஃப் மற்றும் கப்ரா அர்பன் ரிபெல் கான்செப்ட் இரு பிராண்டுகளின் முதல் கார்களாக அறிமுகம் செய்யப்பட்டன. இவை புதிய, அளவில் சிறிய MEB பிளாட்ஃபார்ம் பயன்படுத்துகின்றன. இவற்றின் ப்ரோடக்ஷன் மாடல்கள் 2025 வாக்கில் அறிமுகமாக இருக்கின்றன.
தற்போது என்யாக் மாடல்களை விட அளவில் சிறிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதே மிக முக்கிய திட்டமாக இருக்கிறது. இதனால் 7 சீட் எஸ்.யு.வி. அல்லது எம்.பி.வி. மாடல் பற்றி தற்போது எந்த தகவலும் வெளியாகவில்லை.
"முடியாது என சொல்ல கூடாது. ஒரு சமயத்தில் ஒரு அடி தான் - தற்போது என்யாக் சீரிசை விட அளவில் சிறியதாக மூன்று மாடல்களை உருவாக்குவது மட்டுமே எங்களின் முக்கிய திட்டமாக இருக்கிறது," என ஸ்காஃபர் தெரிவித்தார். 20230 ஆண்டு வாக்கில் ஐரோப்பிய சந்தை விற்பனையில் 50 முதல் 70 சதவீத முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என ஸ்கோடா திட்டமிட்டு இருக்கிறது.
இந்தியாவை பொருத்தவரை கடந்த மாத துவக்கத்தில் தான் கோடியக் எஸ்.யு.வி. ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஸ்கோடா அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், தற்போது மிட்-சைஸ் செடான் மாடலான ஸ்லேவியாவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஸ்கோடா ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்த ஆண்டு மட்டும் ஆறு கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் மாடல்களை பொருத்தவரை முதலில் என்யாக் iV எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.