Share Market Today: குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டிற்கு என்ன பங்குகளை வாங்கலாம்?

Published : Feb 04, 2025, 10:27 AM IST
Share Market Today: குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டிற்கு என்ன பங்குகளை வாங்கலாம்?

சுருக்கம்

சந்தை நிபுணர்கள் பரிந்துரைக்கும் 15 பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. டைட்டன், கண்டெய்னர் கார்ப், ஜோமாடோ போன்ற பங்குகளில் முதலீடு செய்வதற்கான இலக்கு விலை மற்றும் இழப்பு நிறுத்தம் போன்ற முக்கிய தகவல்களையும் இக்கட்டுரை வழங்குகிறது.

பங்குச் சந்தையில் இந்த பங்குகளை வாங்குங்கள் நல்ல லாபம் தரும் என்று அனைத்து பங்குகளையும் கூறி விட முடியாது. சந்தையின் போக்கு நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும்.

பொருளாதாரம் உலகமயமாக்கலுக்குப் பின்னர் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை பங்குச் சந்தை சந்தித்து வருகிறது. சந்தை எவ்வாறு செயல்படுகிறது, முதலீட்டாளர்களின் உணர்வு மற்றும் சாத்தியமான வாய்ப்புகளை புரிந்து கொள்வதற்கு என்றே பல்வேறு பங்குச் சந்தை புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் பரிந்துரைத்து இருக்கும் 15 பங்குகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

டைட்டன் பங்குகளில் 15 நாட்களுக்கு முதலீடு செய்ய ஆக்சிஸ் டைரக்ட் பரிந்துரைக்கிறது. ரூ.3144-3175 விலையில் வாங்கி, ரூ.3,295 இலக்கு விலையுடன், ரூ.3,135 இழப்பு நிறுத்தத்துடன் முதலீடு செய்யலாம்.

கண்டெய்னர் கார்ப் பங்குகளை 15 நாட்களுக்கு ரூ.784-791 விலையில் வாங்கி, ரூ.833 இலக்கு விலையுடன், ரூ.777 இழப்பு நிறுத்தத்துடன் முதலீடு செய்யலாம்.

இந்தியன் மெட்டல்ஸ் பங்குகளை 15 நாட்களுக்கு ரூ.742-749 விலையில் வாங்கி, ரூ.815 இலக்கு விலையுடன், ரூ.727 இழப்பு நிறுத்தத்துடன் முதலீடு செய்யலாம்.

கொரமண்டல் இன்டர்நேஷனல் பங்குகளை 15 நாட்களுக்கு ரூ.1714-1731 விலையில் வாங்கி, ரூ.1833 இலக்கு விலையுடன், ரூ.1697 இழப்பு நிறுத்தத்துடன் முதலீடு செய்யலாம்.

அம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகளை 15 நாட்களுக்கு ரூ.6216-6278 விலையில் வாங்கி, ரூ.6842 இலக்கு விலையுடன், ரூ.6090 இழப்பு நிறுத்தத்துடன் முதலீடு செய்யலாம்.

இந்தியாவின் விலையுயர்ந்த பங்குகள்: எது முதலிடம்? வாங்குனா லட்சாதிபதி தான்

ஜோமாடோ பங்குகள் 3-4 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இலக்கு விலையை ரூ.278ல் இருந்து ரூ.355 ஆக உயர்த்தியுள்ளது.

ஜேகே லட்சுமி சிமெண்ட் பங்குகளில் முதலீடு செய்ய SBI செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.820.

உனோ மிண்டா பங்குகளை தங்கள் போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க SBI செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.1,150-1,200.

மிண்டா கார்ப்பரேஷன் பங்குகளில் முதலீடு செய்ய SBI செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.570-600.

ஃபியம் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்க SBI செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.1,874.

லுமாக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ் பங்குகளில் முதலீடு செய்ய SBI செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.700-720.

ஆல்கார்கோ காடி பங்குகளை 12 மாதங்களுக்கும் மேலாக வைத்திருக்க ஷேர் கான் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.128.

ஜைடஸ் வெல்னஸ் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய ஷேர் கான் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.3,000.

எஸ்பிஐ பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய ஷேர் கான் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.975.

பாலிகேப் பங்குகளை நீண்ட கால முதலீடு செய்ய ஷேர் கான் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.8,300.

பங்குச் சந்தை முதலீடுகள் இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

10 ரூபாய், 20 ரூபாய் பற்றி நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு