முதியோருக்கு பட்ஜெட்டில் என்னென்ன சலுகை; தேசிய சேமிப்பு திட்டத்திற்கு வரி இருக்கிறதா?

Published : Feb 03, 2025, 04:08 PM IST
முதியோருக்கு பட்ஜெட்டில் என்னென்ன சலுகை; தேசிய சேமிப்பு திட்டத்திற்கு வரி இருக்கிறதா?

சுருக்கம்

2025-26 மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டு, வாடகைக்கு டிடிஎஸ் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2025 - 26 மத்திய பட்ஜெட் உரையில் ​​ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற பெரிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். 2025 - 26 மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வருமான வரி செலுத்துவோர் இதன் மூலம் நேரடியாக பயனடைவார்கள். 

இது நடுத்தர வர்க்கத்தினரின் செலவு செய்யும் திறனை அதிகரிக்கும். சமுதாயத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதை நோக்காக கொண்டு இந்த வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முதியோருக்கு சலுகை அறிவித்துள்ளார். இப்போது அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்ய முடியும். முதியோருக்கான பட்ஜெட்டில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், TDS வரம்பு 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வருமான வரியை தாக்கல் வரம்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று இருந்தது. இது தற்போது நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு வருமானத்தின் மீதான வரி விலக்கு வரம்பை ரூ.1 லட்சமாக இரட்டிப்பாக்குவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இது தவிர, வாடகைக்கு டிடிஎஸ் வரம்பை ரூ.6 லட்சமாக உயர்த்துவதற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரி சலுகைகளைப் பெறுவதற்கான ஒருங்கிணைப்பு காலம் ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை
டிடிஎஸ் முறையை அனைவருக்கும் பயன்படும் வகையில் மாற்றி அமைத்து இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அரசாங்கம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கிறது. பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்திற்கு மத்திய வருமான வரியில் மிகப் பெரிய பரிசை அளித்துள்ளது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வரி இருக்காது. இந்த வருமான வரியும் புதிய வருமான வரியில் இருப்பவர்களுக்கு பொருந்தும்.

வருமான வரி எப்படி கணக்கிடுவது?

ரூ.4 லட்சம் வரை வரி பூஜ்ஜியம் வரி. ரூ.4 முதல் 8 லட்சம் வரை 5%, ரூ.8-12 லட்சத்திற்கு 10%, ரூ.12-16 லட்சத்திற்கு 15%, ரூ.16-20 லட்சத்திற்கு 20%, ரூ.20-24 லட்சத்திற்கு 25% மற்றும் ரூ.24 லட்சத்திற்கு மேல் 30% வரி விதிக்கப்படும். இது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என்று நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பில் தெரிவித்து இருந்தார். 

தேசிய சேமிப்புத் திட்டத்திலிருந்து பணம் எடுப்பதற்கு வரி இல்லை

குறிப்பிட்ட தேதிக்குள் TCS செலுத்துவதில் ஏற்படுவது முன்பு குற்றமாக கருதப்பட்டது. தஹ்ர்போது இது நீக்கப்பட்டுள்ளது. கல்விக்காக கடன் வாங்கி இருந்தால், பணம் அனுப்புவதற்கான TCS தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு தேசிய சேமிப்புத் திட்ட (NSS) கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட் அறிவித்துள்ளது.

பட்ஜெட்டில் முதியோருக்கு சலுகைகள்:

* மூத்த குடிமக்களுக்கான வட்டி விலக்கு வரம்பு ரூ.50,000 லிருந்து ரூ.1 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

* வாடகைக்கான TDS-க்கான ஆண்டு வரம்பு ரூ.2.40 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* இந்திய ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் பணம் அனுப்புவதற்கான TCS வரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* அதிக TDS விலக்கு விதிகள் பான் அல்லாத வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு