share market today: பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் குஷி: 1000 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்

By Pothy RajFirst Published May 30, 2022, 4:01 PM IST
Highlights

share market today :மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று, ஏற்றத்துடன் தொடங்கி, உயர்வுடன் முடிந்தன. தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள், ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று, ஏற்றத்துடன் தொடங்கி, உயர்வுடன் முடிந்தன. தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள், ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு வருவதால் விரைவில் பொருளாதாரத்தில் இயல்புநிலை வரும் என்று தெரிகிறது. இந்த செய்தி இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் சாதகமான போக்கை ஏற்படுத்தியது. அதுமட்டும்லலாமல் ஆசியப் பங்குச்சந்தையிலும் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனே முடிந்தது. இந்த செய்தி இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பும் காலை வர்த்தகத்தில் உயர்ந்ததும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

இதனால் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் முன்ப உயர்வுடன் இருந்தன. வர்த்தகத்தில் இந்த ஏற்றம் மாலை வர்த்தகம் முடியும் வரை நீடித்தது. ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஐரோப்பிய யூனியன் நாடுகள் வலுப்படுத்தும் என்பதால் கச்சா எண்ணெய் விலையும் பேரல் 120 டாலரைத் தொட்டது. இருப்பினும் பங்குச்சந்தையில் உயர்வு காணப்பட்டது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1041 புள்ளிகள் அதிகரித்து, 55,925 புள்ளிகளில் ஏற்றத்துடன்முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 308 புள்ளிகள் உயர்ந்து, 16,661 புள்ளிகளில் நிலைபெற்றது.

30 முக்கியப்பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில், டைட்டன், இன்போசிஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மகிந்திரா ஆகிய துறைகளின் பங்குகள் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் லாபமடைந்தன. அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி ஆகிய பங்குகள் 1.5 சதவீதம் வரை உயர்ந்தன. சன்பார்மா, கோடக் மகிந்திரா, டாக்டர் ரெட்டீஸ் நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவில் முடிந்தன.

click me!