andhra pradesh: telangana: எளிதாகத் தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள்: ஆந்திரா, தெலங்கனா, குஜராத் டாப் கிளாஸ்

By Pothy Raj  |  First Published Jun 30, 2022, 2:03 PM IST

எளிதாகத் தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களுக்கான பட்டியலில் முதல் 7 மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

எளிதாகத் தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களுக்கான பட்டியலை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில் 2020ம் ஆண்டு தொழில்சீர்திருத்தத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திய மாநிலங்கள் குறித்த பட்டியலை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

Tap to resize

Latest Videos

அதில், முதல் 7 மாநிலங்களில் ஆந்திரா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து, இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மத்தியப்பிரேதசம் மாநிலங்கள் மற்ற மாநிலங்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளனர்.

தொழில் செய்ய விருப்பமுள்ள மாநிலங்களில் கோவா, கேரளா, அசாம் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. வளர்ந்து வரும் வர்த்தகசூழல் கொண்ட 11 மாநிலங்களில்  டெல்லி, புதுச்சேரி, திரிபுரா மாநிலங்கள் உள்ளன.
 
click me!