
கடந்த 3 நாட்களாக உயர்வுடன், முதலீட்டாளர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருந்த மும்பை, தேசியப் பங்குச்சந்தை இன்று கரடியின் கட்டுப்பாட்டில் சென்று பெருத்த சரிவைச் சந்தித்தது.
தகவல்தொழில்நுட்பத்துறை, பொதுத்துறை வங்கிகள், நிதிச்சேவை, வங்கி, ரியல்எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தன.
என்ன காரணம்
சர்வதேச காரணிகள், அமெரிக்க பெடரல் வங்கி கடனுக்கானவட்டியை உயர்த்தப் போவதாக முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம்தான் சரிவுக்கு பிரதானமாகக் கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் பங்குகளை விற்பதிலேயே ஆர்வம்காட்டியதால், சரிவு அதிகரித்தது.
இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 773 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 58,153 புள்ளிகளில் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 231 புள்ளிகள் சரிந்து 17,375 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பை பங்குச்சந்தையில் மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகள் தலா 2 சதவீதம் சரிந்தன. இந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கான நஷ்டம் 3.4 % அதிகரித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இன்டஸ்இன்ட்வங்கி, டாடாஸ்டீல், பிபிசிஎல், என்டிசிபி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமீட்டன.
கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், டெக்எம், இன்போசிஸ், ஹெச்சிஎல், ஹெச்டிஎப்சி, விப்ரோ, யுபிஎல், பவர்கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்டில்இந்தியா, கோடக் வங்கி, டைட்டன் நிறுவனம், டிசிஎஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி லைப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் டிவின்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. குறிப்பாக ஜோமேட்டோ பங்குகள் 9 சதவீதம் சரி்ந்து ரூ.85.85க்கு விற்பனையானது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.