
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பை எதிர்பார்த்து இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி உயர்ந்துள்ளன.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவிக்க உள்ளார். இதில் வட்டிவீதம் குறைந்தபட்சம் 25 புள்ளிகள் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. பணவீக்கம் கட்டுக்குள் வந்ததால், ஒருவேளை வட்டிவீதம் உயர்த்தப்படலாம் இருக்கலாம்.
இதனால் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் காலை முதலே பங்குச்சந்தையில் உற்சாகத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனால் வர்த்தகம் ஏற்றத்துடன் நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பங்குச்சந்தையும் நேற்று உயர்வுடன் முடிந்தது, இந்ததாக்கமும் இந்தியச் சந்தையில் எதிரொலிப்பதால் வர்த்தகம் உற்சாகமாக நடக்கிறது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 366 புள்ளிகள் அதிகரித்து, 60,652 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகம் நடக்கிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 119 புள்ளிகள் உயர்வுடன், 17,840 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.