மீண்டும் டாப் 20 இடத்திற்குள் வந்த அதானி!.. உலக பணக்காரர்கள் பட்டியலில் எத்தனையாவது இடம் தெரியுமா?

By Raghupati RFirst Published Feb 7, 2023, 9:22 PM IST
Highlights

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, தொடர்ச்சியாக அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி கண்டுவருகின்றது.

இதுவரை 110 பில்லியன் டாலருக்கும் மேல் அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு சரிந்திருக்கிறது. அதானி பங்குகளில் விலைச்சரிவு, பங்குச் சந்தையிலும் கடும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்நிலையில், தொடர் பங்கு விலை சரிவைத் தடுக்க பங்குகளை அடமானமாக வைத்து வாங்கியக் கடனில் ரூ.9,250 கோடியை முன்கூட்டியே அதானி குழுமம் அடைத்திருக்கிறது. அதானி குழுமத்துக்கு ரூ.2.2 லட்சம் கோடி அளவுக்கு கடன்கள் உள்ளது.

இதையும் படிங்க..அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் - அதிமுகவை துரத்தும் சர்ச்சை!

இதில் எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகளில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் இருக்கிறது. இதனால் அதானி டாப் 10 உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தும் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டார். இப்படியான சூழலில் அதானி விவகாரத்தில் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றது.

இந்த நிலையில் அதானி மீண்டும் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலைக்கு வந்துள்ளார். அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 25% உயர்ந்து, அதிகபட்சமாக ரூ.1,965.50ஐ எட்டியது. அதானி போர்ட்ஸ் விலை 9.64% அதிகரித்து ரூ.598.70 ஆக உள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி வில்மர் ஆகிய இரண்டும் முறையே ரூ.1,324.45 மற்றும் ரூ.399.40 என அவற்றின் மேல் சுற்று வரம்பை எட்டியது.

உலகின் பணக்காரர்களில் தற்போது அதானி 17வது இடத்தில் உள்ளார். அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 77.8% அதிகரித்து, 474.72 கோடி ரூபாபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின்  267.03 கோடி ரூபாயாக இருந்தது. சர்வதேச அளவில் மந்தமான நிலை இருந்து வரும் நிலையிலும்,நல்ல வளர்ச்சியினை எட்டியுள்ளதாக அதானி குழுமம் விளக்கம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..AIADMK: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!

click me!