Share Market Live Today: பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் கடும் ஏற்ற இறக்கம்

By Pothy RajFirst Published Jan 11, 2023, 9:54 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி, கடும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் நடந்து வருகிறது. 

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி, கடும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் நடந்து வருகிறது. 

கடந்த திங்கிள்கிழமை ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை, நேற்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் அறிவிப்பை எதிர்பார்த்து மோசமான வீழ்ச்சியைச்சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் வீழ்ச்சியுடன் இந்தியப் பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

ரூ.3 லட்சம் கோடி காலி! பள்ளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டிக்கு பெரும்அடி

அமெரி்க்க பெடரல் ரிசர்வ் இன்று வட்டிவீதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடனே வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவதால் சரிவு தொடர்ந்து 2வது நாளாக நீடிக்கிறது.

அது மட்டும்லாமல் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப எடுத்துவருவது பெரும் நெருக்கடியை சந்தைக்கு ஏற்படுத்தியுள்ளது. 13 வர்த்தக தினங்களாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை எடுத்து வருகிறார்கள், இதுவரை ரூ.16,587 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.

பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 445 புள்ளிகள் சரிவு, 18,000கீழ் நிப்டி: காரணம்?

இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தையில் வர்த்தகம் சுணக்கமாகவும், சரிவுடனும் இருந்தது. சிறிது நேரத்துக்குப்பின் வர்த்தகப் புள்ளிகள் உயர் தொடங்கின.  காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயர்ந்து, 60,295 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 42 புள்ளிகள் அதிகரித்து, 17,956 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், 14 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் மற்றவை இழப்பிலும் உள்ளன. டாடா மோட்டார்ஸ், டெக்மகிந்திரா, மாருதி, டாடா ஸ்டீல், சன்பார்மா, ஏசியன்பெயின்ட்ஸ், இன்போசிஸ், டிசிஎஸ்,என்டிபிசி, விப்ரோ, டைட்டன், எச்சிஎல், லார்சன்அன்ட்டூப்ரோ பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் குஷி! சென்செக்ஸ், நிப்டி உயர்வு! ஐடி பங்கு ஜோர்

நிப்டியில் உலோகம், தகவல்தொழில்நுட்பத்துறை, பொதுத்துறை வங்கிகள், வங்கித்துறை  பங்குகள் ஆர்வத்துடன் வாங்கப்படுகின்றன. மருந்துத்துறை, ஆட்டோமொபைல், ஊடகத்துறை, கட்டுமானம்,எப்எம்சிஜி துறைப் பங்குகள் இழப்பில் உள்ளன.

click me!