
சென்செக்ஸ் வர்த்தகம் இன்று காலை துவங்கியதில் இருந்தே ஏறுமுகமாக இருந்து வருகிறது. 65,000 புள்ளிகளில் துவங்கி தற்போது 65,085.22 புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் உலக வர்த்தகம் சாதகமாக இருப்பதும், இந்தியாவிற்கு வெளிநாட்டு வர்த்தகம் அதிகரித்து இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.
அதேசமயம் நிஃப்டி 19,246.50 புள்ளிகளில் துவங்கி 19,300 புள்ளிகளை தொட்டுள்ளது. அதாவது 0.4% சதவீதம் உயர்ந்துள்ளது. வங்கி நிப்டி 45,000 மார்க்குகளை கடந்துள்ளது. நிஃப்டி ஸ்மால்கேப் 100 1.11 சதவீதமும், நிஃப்டி மிட்கேப் 100 0.40 சதவீதமும், நிஃப்டி 100, நிஃப்டி 200 மற்றும் நிஃப்டி 500 ஆகியவை தலா 0.5 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன. துறை ரீதியாக, நிஃப்டி மெட்டல் 1.28%, நிஃப்டி ஆட்டோ 0.56%, நிஃப்டி ஐடி 0.21% உயர்ந்துள்ளன. நிஃப்டி ரியாலிட்டி மற்றும் நிஃப்டி பார்மா ஆகிய இரண்டும் சரிவை கண்டுள்ளன.
எவ்வளவு டிரை பண்ணாலும் பணத்தை சேமிக்க முடியலயா? அப்ப இந்த டிப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க..
இன்றைய வர்த்தக துவக்கத்தில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 449.46 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி 128.95 புள்ளிகள் அதிகரித்தது. அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வருவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சென்செக்சில் இடம் பெற்று இருக்கும் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?
அதேசமயம், பவர் கிரிட், மாருதி, டெக் மஹிந்திரா, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகளில் சிறிது சரிவை கண்டன.
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி ஆசியாவில் சியோல், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் ஆகியவற்றின் பங்குச் சந்தைகளும் உயர்ந்து காணப்படுகின்றன. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் உயர்வுடன் முடிந்து இருந்தது. அமெரிக்காவின் முதல் காலாண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தி 1.4% இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏற்றுமதி அதிகரித்து, நுகர்வோர் செலவிடுவதும் அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் ரூ.297.94 லட்சம் கோடியை எட்டியது. இதுவே கடந்த வெள்ளிக்கிழமை 296.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் (FPIs) கடந்த வெள்ளிக்கிழமை ரூ.6,397.13 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி இருந்தனர். அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் இந்திய பங்குச் சந்தையில் ரூ.47,148 கோடி முதலீடு செய்துள்ளனர். இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச முதலீடாகும்.
மறைமுக வரி விதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து நான்காவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஜூன் மாதத்தில் 12 சதவீதம் உயர்ந்து ரூ.1.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் கடந்த சனிக்கிழமை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.