Share market today : ரஷ்யா-உக்ரைன் போர் : ஒரேநாளில் ரூ.16 லட்சம் கோடி நஷ்டம்; முதலீட்டாளர்கள் தவிப்பு

Published : Feb 24, 2022, 03:37 PM ISTUpdated : Feb 24, 2022, 04:00 PM IST
Share market today : ரஷ்யா-உக்ரைன் போர் : ஒரேநாளில் ரூ.16 லட்சம் கோடி நஷ்டம்; முதலீட்டாளர்கள் தவிப்பு

சுருக்கம்

உக்ரைன் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ளதையடுத்து, தேசிய, மும்பைப் பங்குச்சந்தைகள் காலையில் தொடங்கிய சரிவு வர்தத்கம் முடிவு வரை இருந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு இன்று மட்டும் ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ளதையடுத்து, தேசிய, மும்பைப் பங்குச்சந்தைகள் காலையில் தொடங்கிய சரிவு வர்தத்கம் முடிவு வரை இருந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு இன்று மட்டும்  ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாகவே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டு கரடியின் ஆதிக்கம் இருந்தது. இந்நிலையில் இந்தியநேரப்படி காலை 6 மணிக்கு உக்ரைன் மீது போர் தொடுக்கவும், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

உக்ரைன் ரஷ்ய போரால் இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தையில் சென்சென்க்ஸ் 2000 புள்ளிகளும்,  தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் 600 புள்ளிகளும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்தன. 

மும்பைப் பங்குச்சந்தையில் காலையில் ஏற்பட்ட சரிவு தொடர்ந்து வந்தது. மாலை வர்த்தகம் முடிவில், சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் சரிந்து, 54,529 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 815 புள்ளிகள் வீழ்ந்து, 16,247 புள்ளிகளில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.

இன்று வர்த்தகத்தில் 3,057 பங்குகள் வர்த்தகத்துக்கு வந்ததில், 2,758 பங்குகள் பெரும் சரிவில் முடிந்தன, 95 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. 227 பங்குகள் வாரஇறுதி என்பதால், ஊசலாட்டத்தில் உள்ளன. 

பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது, அதன் மதிப்பு ரூ.256 லட்சம் கோடியாக இருந்தநிலையில் இன்று காலையில் ஏற்பட்ட பெரும் சரிவால் பங்குச்சந்தையி்ன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.10லட்சம் கோடி சரிந்து, ரூ.246 லட்சம் கோடியாக வீழ்ந்தது.

பிப்ரவரி 16ம் தேதியிலிருந்து  பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்ளுக்கு ரூ.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

போர் பதற்றம் காரணமாக ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலரை எட்டிய நிலையில், இன்று மேலும் அதிகரித்து, 103 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலரைக் கடந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கண்டு முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

பங்குச்சந்தையி்ல் அனைத்து துறையின் பங்குகளும் இன்று பெருத்த அடிவாங்கி 6 சதவீதம் அளவுக்கு இழப்பைச்சந்தித்தன. நிப்டியில் அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகள், தகவல்தொழில்நுட்பம், ஆட்டமொபைல், உலோகம், நிதித்துறை கடுமையான இழப்பைச்சந்தித்தன. ஒவ்வொரு 10 பங்குகளிலும் 9 பங்கு இழப்பைச்சந்தித்தன


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

32 மணி நேரம் டிராபிக் ஜாம்.. 25 கிமீ நகர முடியாமல் நின்ற வாகனங்கள்.. மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
AI வளர்ச்சியில் ஆபத்தா? Carnegie India Global Technology Summit-ல் AI எதிர்காலம் குறித்து விவாதம்