Russia Ukrain Crisis: ரஷ்யாவின் மரண ஆயுதங்கள்; தாங்குமா உக்ரைன்: ராணுவ பலம் ஓர் ஒப்பீடு

By Pothy Raj  |  First Published Feb 24, 2022, 2:40 PM IST

எது நடக்ககூடாது என்று சர்வதேச சமுதாயம் அஞ்சியதோ அது இன்று காலை ரஷ்யா-உக்ரைனில் நடந்துவிட்டது. ஆம், உக்ரைன் மீது போரை அறிவித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உலக நாடுகளை பெரும்பீதியில் ஆழ்த்தியுள்ளார்.


எது நடக்ககூடாது என்று சர்வதேச சமுதாயம் அஞ்சியதோ அது இன்று காலை ரஷ்யா-உக்ரைனில் நடந்துவிட்டது. ஆம், உக்ரைன் மீது போரை அறிவித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உலக நாடுகளை பெரும்பீதியில் ஆழ்த்தியுள்ளார்.

Tap to resize

Latest Videos

3-வது உலகப்போரை  உலகம் தாங்காது என்ற ரீதியில் இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்கரீதியில் பேச்சு நடத்த உலகநாடுகள் அறிவுறுத்தின. ஆனால், யாரும் எதிர்பாராமல் இருக்கையில் போரை புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் களமிறங்கினால், விளைவு மிக மோசமானதாகஇருக்கும் என்பதில் மறுப்பதற்கில்லை. 

முன்னாள் சோவியத்யூனியன் நாட்டில் ஒருஅங்கமாகத்தான் உக்ரைன் இருந்தாலும், சோவியத் சிதறுண்டபின் தனிநாடாக உதயமானது. இருப்பினும், உக்ரைனை ரஷ்யா தனது ஆளுகைக்குள் உட்படுத்தவே முயற்சி செய்துவந்தது என்பது கடந்த கால வரலாற்றில் தெரியவருகிறது. 
படை பலம், வீரர்கள் எண்ணிக்கை, விமானங்கள், கப்பல், ஆயுதங்கள் என அனைத்திலும் ரஷ்யா வல்லரசு என்பதை நிரூபித்தாலும், உக்ரைனுடன் மோதும்போது சேதம் ஏற்படாமல் இருக்காது. ரஷ்யாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைன் நாடும் ஆயுதங்கள், வீரர்கள், விமானங்களை வைத்துள்ளனர். 

உலக நாடுகளின் ராணுவ வல்லமையை மதிப்பிடும் 'குளோபல் ஃபயர் பவர்' எனும் இணையதளம் மற்றும் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ் ஆகிய நிறுவனங்களின் அறிக்கையில் இரு நாடுகளின் படை பலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைப்படை

தரைப்படையைப் பொறுத்தவரை உக்ரைன் நாட்டைவிட 5மடங்கு வீரர்களை ரஷ்யா வைத்திருக்கிறது. உக்ரைனிடம் 2 லட்சம் ராணுவ வீரர்கள் இருந்தால், ரஷ்யாவிடம் ஏறக்குறைய 10 லட்சம் ராணுவ வீரர்கள்  பணியில் உள்ளனர். இரு நாடுகளிடமும் 2.50 லட்சம் ராணுவ வீரர்கள் ரிசர்வில் வைக்கப்பட்டுள்ளனர். உக்ரைனிடம் 50ஆயிரம்துணை ராணுவத்தினர் இருக்கையில் ரஷ்யாவிடம் 2.50 லட்சம் பேர் உள்ளனர்

டாங்கிகள்

ரஷ்யாவிடம் 12,240 டாங்கிகள் உள்ளன,ஆனால், உக்ரைனிடம் 2,596 டாங்கிகள்தான் உள்ளன. கவசவாகங்கள் 30ஆயிரத்துக்கும் மேல் ரஷ்யாவிடம் இருக்கிறது. ஆனால் உக்ரைனிடம் 12,303 மட்டுமே இருக்கிறது. ரஷ்யாவிடம் எஸ்பிஏ ஆயுதம் 6,574 உள்ளன, உக்ரைனிடம் 7,571 மட்டும இருக்கிறது. டாவ்டு ஆர்டிகல் பொறுத்தவரை ரஷ்யாவிடம் 1,607ம் உக்ரைனியம் 2ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன.

இது தவிர ரஷ்யாவிடம் கொத்துக் குண்டுகள், ராக்கெட்டுகள், நவீன ஏவுகனைகள், மோசமான சேதத்தை ஏற்படுத்தும் குண்டுகள், போர்விமானங்களை துரத்தி அழிக்கும் ஏவுகணைகள், வானில் இடைமறித்து அழிக்கும் ஏவுகணை என பல்வேறு நவீன மரண ஆயுதங்கள் உள்ளன.

விமானப்படை
விமானப்படையைப் பொறுத்தவரை ரஷ்யா ஜாம்பவான். 4,178 பல்வேறு வகையான நவீன போர்விமானங்களை ரஷ்யா வைத்துள்ளது. உக்ரைனிடம் 318 விமானங்கள் மட்டும் இருக்கின்றன.772 ஜெட்போர் விமானங்கள் ரஷ்யாவிடம் இருக்கின்றன, உக்ரைனிடம் 69 மட்டுமேஇருக்கிறது. 544 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவிடம் உள்ளநிலையில் 34 மட்டுமே உக்ரைனிடம் இருக்கிறது

கப்பற்படை
ரஷ்யாவிடம் 605 பல்வேறு விதமான போர்க்கப்பல்கள் உள்ளநிலையில் உக்ரைனிடம் 38 மட்டுமே உள்ளன. ரஷ்யாவிடம் ஒரு விமானம் தாங்கி கப்பலும், 15 போர் கப்பல்களும், 70 நீர்மூழ்கிகப்பல்களும் உள்ளன. உக்ரைனிடம் ஒரு போர் கப்பல் மட்டுமே இருக்கிறது. சிறிய ரக போர்க்கப்பல்கள் ரஷ்யாவிடம் 11 இருக்கிறது, உக்ரைனிடம் 86 உள்ளன

click me!