
இந்திய கப்பல் கழகத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தயாராகிறது. இதற்கான நிதி விருப்ப கோரி்க்கைகளை மத்திய அரசு விரைவில் கோரும் எனத் தெரிகிறது.
இந்திய கப்பல் கழகத்தின் பங்குகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் விற்பனை செய்ய மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
இந்திய கப்பல் கழகத்தை தனியார் மயமாக்குவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு ஏராளமான விருப்ப மனுக்கள் வந்தன. இதையடுத்து, 2020 டிசம்பர் மாதம் மத்திய அரசின் முதலீடுத்துறை மற்றும் பொதுச்சொத்து துறை மேலாண்மை துறை, இந்திய கப்பல் கழகத்தின் 63 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.
இதற்கு 2020ம் ஆண்டு நவம்பர் மாதமே மத்திய அரசு கொள்கைரீதியான ஒப்புதலும் வழங்கியது.
நடப்பு நிதியாண்டுக்குள் இந்திய கப்பல் கழகத்தை தனியார் மயமாக்கும் செயல் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. 2022-23 நிதியாண்டுக்குள் முதலீட்டு விலக்கல் மூலம் ரூ.65ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே ஒஎன்ஜிசி பங்குகளை விற்பனை செய்து ரூ.3 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு திரட்டியது. அடுத்ததாக எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீதப் பங்குகளை விற்று ரூ.21ஆயிரம் கோடி திரட்டி வருகிறது. அடுத்தார்போல் பவான் ஹன்ஸ் மேலாண்மையை ரூ.211 கோடிக்கு ஸ்டார்9 மொபைலிட்டி நிறுவனத்துக்கு விற்றுள்ளது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இந்திய கப்பல் கழகத்தின் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான ஷிப்பிங் ஹவுஸ், பயிற்சி மையம் உள்ளிட்ட முக்கியமில்லாத சொத்துக்களை விற்கவில்லை எனத் தெரிகிறது. இவற்றை இணைத்து விற்பனை செய்வது என்பது அதிகமான காலமாகும். 3 அல்லது 4 மாதங்களில் இதை முடிக்க திட்டமிட்டுள்ளதால் அவை இணைக்கப்படாது எனத் தெரிகிறது.
இது தொடர்பாக கடந்த வாரம் கப்பல்கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், இந்திய கப்பல் கழகத்தின் முக்கியமில்லாத ஷிப்பிங் ஹவுஸ், நிலம், மும்பை மற்றும் கடல்சார் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை விற்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.