
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இன்று முதல் எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கடன் வாங்கிய எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்திவரும் தவணைத் தொகை முன்பைவிட அதிகரிக்கும்.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு ஜூலை 15ஆம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருவதாகவும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. எம்.சி.எல்.ஆர். ஆனது ஜூன் 10, 2020 மற்றும் ஏப்ரல் 14, 2022 க்கு இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் 7.0 சதவீதமாக இருந்தது நினைவூட்டத்தக்கது.
ஒரு மாத எம்.சி.எல்.ஆர். விகிதம் 7.95 சதவீதத்தில் இருந்து 8.0 சதவீதமாகவும், மூன்று மாத விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு புதிய எம்சிஎல்ஆர் 8.40 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாகவும், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.50 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
5.4 வினாடியில் 100 கி.மீ வேகத்தில் பறக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார்! விலை எவ்வளவு தெரியுமா?
இரண்டு ஆண்டு காலத்திற்கு, புதிய விகிதம் 8.60 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாகவும், மூன்றாண்டு காலத்திற்கு, 8.70 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக எம்.சி.எல்.ஆர். விகிதம் உயர்ந்துள்ளது.
எம்.சி.எல்.ஆர். என்பது வங்கி கடன் வாங்குபவர்களுக்கு கடன்களை வழங்கும் குறைந்தபட்ச விகிதமாகும். ரெப்போ விகிதத்தில் மாற்றங்கள் எம்.சி.எல்.ஆர். விகிதத்தையும் பாதிக்கலாம். பிப்ரவரி 2023 இல், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் அதிகரித்து 6.50 சதவீதமாக உயர்ந்தது. பின்னர், ரெப்போ வட்டி விகித உயர்வை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.
எம்.சி.எல்.ஆர். அதிகரிப்புடன், எம்.சி.எல்.ஆர். விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான மாதாந்திர தவணைகள் (EMI) அதிகரிக்கும். இருப்பினும், எம்.சி.எல்.ஆர். உடன் இணைக்கப்பட்ட கடன்கள் மட்டுமே பாதிக்கப்படும். ஈ.பி.எல்.ஆர். (EBLR) உடன் இணைக்கப்பட்ட கடன்களைப் பெற்றவர்களுக்கு வட்டி உயராது.
ரூ.7.27 லட்சம் வரை வருமான வரி கிடையாது! புதிய வரி விதிப்பு முறை பற்றி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.