ரூ.2.07 லட்சம் கோடி சொத்து.. தினமும் நன்கொடை மட்டும் ரூ.3 கோடி.. நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் பற்றி தெரியுமா?

By Ramya s  |  First Published Jul 15, 2023, 8:35 AM IST

HCL  தற்போது 11.8 பில்லியன் டாலர்கள் ஆண்டு வருமானம் கொண்ட நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது


HCL நிறுவனர் ஷிவ் நாடார். சுமார் ரூ.2,07,700 கோடி (ஃபோர்ப்ஸ்) சொத்து மதிப்புடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். அவர் தனது ஐந்து நண்பர்களுடன் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது முதல் தொழில் கால்குலேட்டர்கள் மற்றும் நுண்செயலிகளை உருவாக்குவது தான். அந்த நிறுவனம் பின்னர் HCL டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமாக மாறியது. HCL  தற்போது 11.8 பில்லியன் டாலர்கள் ஆண்டு வருமானம் கொண்ட நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. 60 நாடுகளில் HCL நிறுவனத்தில் 222,000 பேர் பணிபுரிகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தை வழிநடத்திய பிறகு, அவர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின்னர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இப்போது HCL நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்தியாவின் பணக்கார பெண்களில் இவரும் ஒருவர்.

Tap to resize

Latest Videos

ஷிவ் நாடார் நாட்டின் முன்னணி நன்கொடையாளர்களில் ஒருவராகவும் உள்ளார். 1.1 பில்லியன் டாலர்களை ஷிவ் நாடார் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துள்ளார். ஷிவ் நாடார் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தார். அவரது மனைவி கலை சேகரிப்பாளர். அவர் டெல்லியில் இரண்டு கலை அருங்காட்சியகங்களை வைத்துள்ளார்.

2008 இல் பத்ம பூஷன் பெற்றார். ஷிவ் நாடார் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர். 1967 ஆம் ஆண்டு வால்சந்த் குழுமத்தில் வேலை செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது முதல் நிறுவனம் மைக்ரோகாம்ப் என்று பெயரிடப்பட்டது. 1,87,000 முதலீட்டில் HCL 1976 இல் நிறுவப்பட்டது.

இந்திய யூனிகார்னுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் - உங்களுக்கு தெரியுமா?

1980 ஆம் ஆண்டில், நிறுவனம் சர்வதேச சந்தையில் IT ஹார்டுவேரை விற்பனை செய்யத் தொடங்கியது. நிறுவனம் தனது சர்வதேச செயல்பாட்டின் முதல் ஆண்டில் 10 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியது. 1996 ஆம் ஆண்டில், ஷிவ் நாடார் சென்னையில் SSN பொறியியல் கல்லூரி என்ற பொறியியல் கல்லூரியை சென்னையில் நிறுவினார். இவரது நிறுவனம் மற்ற கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது.

Hurunன் 2022 பட்டியலில், ஷிவ் நாடார் இந்தியாவின் அதிக நன்கொடை வழங்கிய நபராக உருவெடுத்தார். 1161 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதாவது ஒரு நாளைக்கு ரூ.3 கோடி வழங்கி உள்ளார். அவரை தொடர்ந்து. 484 கோடி நன்கொடையுடன் அசிம் பிரேம்ஜி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இப்போது HCL டெக்னாலஜிஸ் தலைவராக உள்ளார். Hurun படி, கடந்த ஆண்டு அவரது நிகர மதிப்பு ரூ.84,330 கோடி ஆகும். ரோஷினி ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். பூர்வீக உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் செயல்படும் ஒரு அறக்கட்டளையான வாழ்விட அறக்கட்டளையையும் அவர் நடத்துகிறார். ரோஷ்னி கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தனது எம்பிஏ படிப்பை முடித்தார்.

திரையரங்குகளில் சாப்பிடுவது முதல் ஆன்லைன் கேமிங் வரை - ஜிஎஸ்டி மாற்றங்கள் பற்றி முழு விவரம்

click me!