Income Tax Return: வருமானவரியைச் சேமிக்கணுமா? எஸ்பிஐ வரிசேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?

By Pothy RajFirst Published Mar 5, 2022, 12:46 PM IST
Highlights

Income Tax Return: வருமானவரி செலுத்தாமல் சேமிப்புத் தி்ட்டங்களில் முதலீடு செய்து சேமிக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் முக்கியமானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் எஸ்பிஐ டேக்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்-2006 ஆகும்.

வருமானவரி செலுத்தாமல் சேமிப்புத் தி்ட்டங்களில் முதலீடு செய்து சேமிக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் முக்கியமானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் எஸ்பிஐ டேக்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்-2006 ஆகும்.

ஆண்டுக்கு ரூ.5 லட்சதுக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் குறிப்பிட்ட சதவீதத்தை வருமான வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால், வருமானவரி செலுத்துவோரின் சிரமங்களை உணர்ந்து அதி்லும் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.

அதாவது, வருமானவரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தில் வரிவிலக்கு அளிக்கக்கூடிய பகுதியில் சேமிப்பு செய்திருத்தல், முதலீடு செய்திருந்தால், அதற்குரிய  விண்ணப்பத்தை  அளித்தால்  ரீபண்ட் வருமானவரித்துறையால் திரும்ப வழங்கப்படும்.

அந்த வகையில் வருமானவரி செலுத்துவோர் வரியைச் சேமிக்கும் வகையில் ஏராளமான வருமானவரி சேமிப்புத்திட்டங்கள் உள்ளன. இதில் முக்கியமாக எஸ்பிஐ வங்கி வழங்கும் வரி சேமிப்புத் திட்டம் 

இந்த வருமானவரி சேமிப்புத் திட்டத்தில் வருமானவரி செலுத்தும் தனிநபர்ஒருவர் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள்வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தில்ஒருவர் குறைந்தபட்சம் ரூ1000 முதல் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்க முடியும்
வட்டி வீதம்

இந்த வருமானவரி சேமிப்புத் திட்டத்துக்கும், நிலையான வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டிஅளவுதான் கிடைக்கும். சமீபத்திய கணக்கின்படி, அதாவது பிப்ரவரி 15ம் தேதி நிலவரப்படி 5 முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் டெபாசிட்களுக்கு 5.5% வட்டி தரப்படுகிறது
திட்டத்தின் பயன்கள் என்ன

இந்த திட்டத்தில் தனிநபர்கள் முதலீடு செய்யும்போது, வருமானவரிச் சட்டம் 80சியின் கீழ் டிடிஎஸ் சலுகை உள்ளது. மேலும், வருமானவரிச் சட்டம் 15G/15Hஆகியவற்றின் கீழ் முதலீட்டாளர், வரிப்பிடித்தத்திலிருந்து விலக்குப் பெற முடியும்
யாரெல்லாம்முதலீடு செய்யலாம்

இந்தியக் குடியுரிமை பெற்று வசிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் வரி சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக்குடும்பத்திலும் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். இதற்கு பான் வைத்திருப்பது கட்டாயம். 

click me!