
சோனி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றன. இரு நிறுவனங்கள் கூட்டனியில் உருவாகும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட இருக்கிறது.
ஆட்டோமொபைல் உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் விற்பனை திறன் மற்றும் சோனியின் இமேஜிங், தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கிணைக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் வாகனம் ஹோண்டா ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இரண்டாம் உலக போருக்கு பின் ஜப்பான் மீண்டு எழ தொடங்கும் போதே சோனி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஹோண்டா நிறுவனத்தை சொச்சிரோ ஹோண்டா எனும் பொறியாளர் துவங்கினார். தந்தையின் சைக்கிள் ரிப்பேர் கடையில் உதவி செய்து கொண்டே ஹோண்டா நிறுவனத்தின் உலகளாவிய நிறுவனமாக வளர்த்தார்.
சோனி நிறுவனத்தை அகியோ மொரிட்டா தொடங்கினார். இவர் பிராடக்ட் டெவலப்மெண்ட் பிரிவில் அதிக ஆர்வம் மிக்கவர் ஆவார். 1970-க்களில் சோனி தனது வாக்மேன் போர்ட்டபில் ஆடியோ பிளேயரை உருவாக்கும் போது, சில பொறியாளர்கள் மட்டும் இந்த யோசனை சரியாக இருக்காது என நினைத்தனர். எனினும், மொரிட்டா மக்கள் பயணங்களின் போதே இசையை கேட்க வேண்டும் என நினைத்தார்.
"வலராற்று மற்றும் கலாச்சார சிறப்பம்சங்கள் நிறைந்த நிறுவனங்களாக சோனி மற்றும் ஹோண்டா இருக்கின்றன. எனினும், இவற்றின் தொழில்நுட்ப திறன்கள் முற்றிலும் வித்தியாசமானது. எதிர்காலத்தில் சிறப்பான போக்குவரத்தை ஏற்படுத்த இரு நிறுவனங்களின் திறனை வெளிக் கொண்டுவர இந்த கூட்டணி உதவும் என நம்புகிறேன்," என ஹோண்டா மூத்த நிர்வாக அதிகாரி டொஷிரோ மிபெ தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.