Russia Ukrain crisis:சண்டை கிடக்கட்டும்: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத மே.நாடுகள்:உக்ரைன் கெஞ்சல்

By Pothy Raj  |  First Published Mar 1, 2022, 12:58 PM IST

உக்ரைன்-ரஷ்யா போர் ஒருபக்கம் நடந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவாங்குவதை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் நிறுத்தவில்லை


உக்ரைன்-ரஷ்யா போர் ஒருபக்கம் நடந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவாங்குவதை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் நிறுத்தவில்லை

அமெரி்க்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் தொடரந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், வடமெரிக்க நாடுகள் அடங்கிய நேட்டோ படையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, முதலில் எல்லையில் படைகளை நிறுத்தியது. பின்னர், கடந்த மாதம் 24ம் தேதி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி போரில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக போர் நீடித்துவருகிறது. இதுவரை பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பு நாடுகளும் சென்றபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் உக்ரைனுடன் ரஷ்யா போர் செய்துவருதையடுத்து,ரஷ்யா மீது ஐரோப்பியயூனியன் நாடுகள்,அமெரி்க்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.

பொருளாதாரத் தடை ஒருபக்கம் இருந்தாலும், சண்டை ஒருபக்கம் நடந்தாலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைக்கவில்லை, நிறுத்தவும்இல்லை.

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வரத்தகர்கள் தொடர்ந்து ரஷ்ய வியாபாரிகளிடம் தொலைப்பேசியில் பேசி கச்சா எண்ணெய்க்குரிய ஆர்டர்களை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்குரிய பணத்தை உரிய வங்கியில் கச்சிதமாகச் செலுத்தி வருகிறார்கள். இதனால், பொருளாதாரத் தடை ஒருபக்கம் விதித்தது வெறும் கண்துடைப்பா என்ற கேள்வி எழுகிறது.

ஸ்விப்ஃட் வங்கிமுறையிலிருந்து ரஷ்ய வங்கிகளை நீக்குதல், பொருளாதாரத் தடை, நரர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் நிறுத்தம், வானில் விமானம் பறக்கத் தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன் விதித்துள்ளன
பொருளாதாரத் தடைகளை விதித்து தங்களை உக்ரைனுக்கு ஆதரவாகக் காட்டிக்கொள்ளும் இந்த நாடுகள் மறுபுறம் ரஷ்யாவுடனாந வர்த்தகத்தை மட்டும் கைவிடவில்லை.

உலகளவில் நாள்தோரும் ஒரு கோடி பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால்,இதில் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் பொருட்களை மேற்கத்திய நாடுகளக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்கிறது. ஐரோப்பாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்களில் மூன்றில் இரு பங்கு ரஷ்யாவிலிருந்துதான் இறக்குமதியாகிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்க நாடுகளுக்கும் , ஆசியாவில் சில நாடுகளுக்கும் செல்கிறது.

ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்து கச்சா எண்ணெய் வாங்காமல் வீராப்புக்காட்டினால், பாதிக்கப்படப்போவது ரஷ்யாவின் பொருளாதாரம் அல்ல, ஐரோப்பியநாடுகளின் பொருளாதாரம்தான். 

ஐரோப்பிய நாடுகளுக்கு வசந்தகாலம்வரை பயன்படுத்தக்கூட போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு இல்லை. அப்படியிருக்கும்போது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது மோசமானவிளைவுகளை ஏற்படுத்தும் என ஜெர்மனி கவலைப்படுகிறது. 

ரஷ்யாவிலிருந்துகச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் பேரல் 150 முதல் 200 டாலர் வரை உயர்ந்துவிடும் என்று அமெரிக்கா பதறுகிறது. ஆதலால், அமெரிக்கா,ஜெர்மனி நாடுகள், தாங்கள் விதித்த பொருளாதாரத் தடையால் ரஷ்யா பாதிக்கப்படுவதைவிட தங்கள் நாடுகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தடை குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.

வளைகுடா நாடுகளைக் கொண்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பான ஒபேக்கும்தங்களின் தினசரி உற்பத்தியை 4 லட்சம் பேரலுக்கு அதிகரிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டதால், ரஷ்யாவை நம்பி இருப்பதைத் தவிர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு வேறு வழியில்லை.

ஆனால், போரில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை உக்ரைன் கடிந்துள்ளது. 

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ரஷ்யாவிடம்கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள். அந்நாட்டிடம்இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உக்ரைன் ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் மரணத்துக்கு கொடுக்கும் விலை” எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!